வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

 

உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பிரசாந்த் ஆஸ்பத்திரியும் இணைந்து சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பி.ஆர்.ஓ., உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


இந்த இலவச மருத்துவ முகாமை தமிழ் சினிமாவின் கடைக்குட்டி சிங்கம் நடிகர் கார்த்தி துவக்கி வைத்து பேசும்போது:
பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு முதலில் இந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சங்கம் நடத்துவது அத்தனை சுலபம் இல்லை. அதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிற பத்திரிகையாளர்கள் சங்கத்தை நடத்துவது ரொம்ப சிரமம். சங்க வேலைகள் பெரும் நேரத்தை எடுத்துக் கொள்ளும். குடும்பத்தை கவனிக்கவே முடியாமல் போய்விடும்.

அதிலும், குறிப்பாக பத்திரிகையாளர்கள் செய்திகளுக்காக ஓடிக் கொண்டேயிருப்பார்கள். ஒரே நேரத்தில் 4 பிரஸ் மீட் இருந்தால் சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடவேண்டியிருக்கும். தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பார்கள். எங்க போயிட்டு வந்தாலும் அப்பா தண்ணி குடிச்சியான்னு கேப்பாரு. ஒருத்தர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இல்லன்னா 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
நமக்கு ரொம்ப முக்கியமானது லிவர். அதை சரியாக வைச்சிகிட்டா போதும். அதுக்கு கண்டிப்பாக தண்ணீர் குடிக்கனும். சின்ன சின்ன யோகா செய்தாலும் ரொம்ப நல்லது.


எங்க உடல் நிலையை சரியா வைச்சிக்காம போய் ஷூட்டிங் நேரத்துல திடீர்னு தலைவலி வந்து ஷூட்டிங் கேன்சல் ஆனா தயாரிப்பாளருக்கு எவ்ளோ நஷ்டம். அந்த மாதிரிதான் உங்க தொழில்லயும் சிரமம் இல்லாம சிராக போகனும்னா உடல் நிலையை சரியா வைச்சிக்கணும்.


பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் நான் சப்போர்ட்டாவே இருப்பேன். இந்த மருத்துவ முகாமை இலவசமாக நடத்தி தர முன்வந்த பிரசாந்த் மருத்துவமனைக்கும், டாக்டர்களுக்கும் நன்றி.
இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார். நிகழ்ச்சியை பத்திரிகையாளர் முபாஷர் தொகுத்து வழங்கினார். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஆபிரகாம் லிங்கன் வரவேற்புரையும், முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் சஞ்சய் நன்றி கூறினார்.
முன்னதாக மருத்துவ முகாமை தொடங்கி வைக்க வந்த நடிகர் கார்த்திக்கு சங்கத்தின் சார்பில் தலைவர் கவிதா நினைவு பரிசு வழங்கினார். துணைத்தலைவர் ராதாபாண்டியன் சால்வை அணிவித்தார். மருத்துவ முகாமை நடத்தி கொடுத்த பிரசாந்த் மருத்துவமனை டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, டாக்டர் ராஜ்கிருஷ்ணா ஆகியோருக்கு நடிகர் கார்த்தி சால்வை அணிவித்தார்.

297 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன