வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா..!

 

 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவா!

ஜீவா அவ்வளவு எளிதில் அடைய முடியாத ஒரு தனித்துவமான குணத்தை கொண்ட ஒரு நடிகர். வணிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் படங்களை கொடுக்கும் அவரது திறமை அவரை அனைத்து தரப்பு பார்வையாளர்களும்  மிகவும் ரசிக்கும் ஒரு நடிகனாக வைத்திருக்கிறது. அவர் எப்போதுமே வழக்கமான விஷயங்களை உடைத்து புதுமையான விஷயங்களை செய்யும் லட்சியத்துடன் இருப்பவர். கீ (டெக்னோ), ஜிப்சி (ட்ராவல்) மற்றும் கொரில்லா (அட்வென்சர்) ஆகிய மூன்று வித்தியாசமான படங்களை தொடர்ந்து ரத்தின சிவாவின் பெயரிடப்படாத படத்தின் மூலம் கமெர்சியல் பாணிக்கு திரும்புகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படம் ஒரு ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாகும்.

“ஜீவா சார் எப்போதும் மிகச்சிறந்த ஒரு நடிகர், ஆக்‌ஷன், எமோஷன், நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றை திறம்பட, நேர்த்தியாக எந்த சிரமமின்றி கொடுக்க கூடியவர். இந்த படம் அவரின் முழு திறமையையும் வெளிக்கொணரும் படமாக இருக்கும் என்றார் ‘றெக்க’ படத்தின் மூலம் இயக்குனரான ரத்தின சிவா.

“ஸ்கிரிப்ட் இறுதி வரைவு முடிந்தவுடன், நான் வேறுபட்ட உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வரும் ஒரு சிறந்த நடிகரை தேடினேன். தற்செயலாக நான் ஜீவா அவர்களை சந்தித்து, உரையாடும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. நான் கதையை சொன்னவுடனே, அவருக்கு மிகவும் பிடித்து போனது. அவர் தனது தற்போதைய படங்கள் அனைத்தும் அழுத்தமான, திரில்லர் படங்களாக  இருப்பதால் உடனடியாக ஒரு கமெர்சியல் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்த படம் ஜீவாவை மீண்டும் ‘மாஸ்’ ஏரியாவுக்கு கொண்டு வரும்” என்றார்.

மாயாவரம் கிராமத்தின் பின்னணியில், உண்மை சம்பவங்களை மையப்படுத்தி  உருவாகும் இந்த படம் நட்பின் சாரத்தை கொண்டிருக்கும். அந்த கிராமம் இயக்குனரின் தாயாரின் சிந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களை பற்றி கூறும்போது, “ஐசரி கணேஷ் சார் எனக்கு ஒரு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளார். அது ஒரு நம்பகமான, சிறந்த திரைப்படத்தை வழங்குவதற்கு ஒரு தீவிர பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது LKG, பப்பி, ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படம் உட்பட இன்னும் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

டி-இமான் இசையமைக்க, பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிஷோர் எடிட்டிங்கும், கணேஷ் சண்டைப்பயிற்சியும் கவனிக்கின்றனர். சென்னையில் நாளை படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. நாயகியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

343 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன