செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

வசூல் மந்தம்… டிவிட்டரில் முதலிடம்… தீராத சர்கார் சலசலப்பு…!

 

அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு அலப்பறியது. அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான ட்வீட்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதில் இந்தியளவில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தென்னிந்திய சினிமா கைப்பற்றியுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ #Sarkar படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ #Viswasam ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

டிவிட்டரில் விஜய்யின் சர்கார் முதலிடம் பிடித்தாலும் வசூல் கணக்கில் தயாரிப்பாளரை குப்புறத்தான் தள்ளி உள்ளது என்றே சொல்லலாம்.
விஜயின் முந்தைய படமான மெர்சல் வசூலைக்கூட சர்கார் மிஞ்சவில்லை என்பதுதான் உண்மை என்கிறார்கள் படம் வாங்கி வெளியிட்டவர்கள்.
அதோடு சமூக வலைதளமான டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் பல லட்சம் பேர் பார்த்தார்கள், டிரண்டிங்கில் முதலிடம் என்றெல்லாம் சொல்லும் படங்கள் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் கழுத்தை பிடிக்காமல் இருந்ததில்லை என்பது தான் உண்மை.

இது தவிர, 3. மகேஷ் பாபுவின் ‘பரத் அனே நேனு’#BharatAneNenu, 4. ஜூனியர் என்.டி.ஆரின் ‘அரவிந்த சமேதா’ #AravindhaSametha, 5. ராம் சரணின் ‘ரங்காஸ்தலம்’ #Rangasthalam, 6. சூப்பர் ஸ்டாரின் ‘காலா’ #Kaala என ட்ரெண்ட் நீள்கிறது. மேலும், ட்விட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற மொமெண்ட்ஸாக விஜய்யின் ‘சர்கார்’ முதலிடத்திலும், ‘மீ டூ’ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் #Sarkar #MeToo #KarnatakaElection #KeralaFloods #Aadhaar #JusticeForAsifa #DeepVeer #IPL2018 #WhistlePodu #AsianGames2018 ஆகிய ஹேஷ்டேக்குகளும் இடம்பிடித்தன.

2018 இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின்போது இந்திய கால்பந்து அணியின் ஸ்கிப்பர் சுனில் சேத்ரி வீடியோ மூலம் ரசிகர்களுக்கு அரங்கை நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட வீடியோ ட்வீட்டே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அதிகம் லைக் செய்த ட்வீட்டாக, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கார்வாசவுத் என்ற பண்டிகையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம், சுமார் 2,15,000 லைக்ஸ்களை பெற்றுள்ளது.
ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தையும், அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் உள்ளனர். மேலும், அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.

 

294 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன