செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

அஜீத்தின் விஸ்வாஸ்சம் படத்தின் டிவி உரிமத்தை கைப்பற்றிய ரஜினி பட தயாரிப்பு..!

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. தல அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

முதன் முறையாக கிராமிய பின்னணியில் நடிக்கும் அஜித், மதுரையின் காவல் தெய்வமாக விளங்கும் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் மதுரை வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி வெளியான நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி கைப்பற்றியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் ‘பேட்ட’ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைவசம் வைத்துள்ளது. தற்போது சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் மற்றொரு பெரிய நடிகர் திரைப்படமான அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் உரிமத்தையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

695 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன