வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

மாரி 2 விமர்சனம்

மாரி 2 விமர்சனம்

பில்டப் எல்லாம் ஓகேதான்… நீ பன்ன பில்டப்புக்கு இந்த கதையை டப்பாவுல கூட அடைக்க முடியாதேப்பா என்பதை போல இருக்கிறது தனுஷின் மாரி2.
ரவுடியா நடிக்கிறதுன்னா தனுஷூக்கு ரொம்ப புடிக்கும்போல அதுவும் வகை தொகையே இல்லாம இஷ்டம்போல டயலாக் பேசி என்ன சொல்ல வர்றோம்னே தெரியாம ஒரு படத்துல நடிச்சிட்டு அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் மாரின்னு சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணுமில்ல… அதுக்கு தனுஷை பாராட்டலாம்.


இந்த மாரி2 வர்றதுக்கு முன்னாடி வடசென்னை அப்படின்னு ஒரு படத்துலயும் தனுஷ் ரவுடியாதான் நடிச்சிருந்தார்… மகா மட்டமான டேஸ்ட் கதைய உலக தரத்துக்கு எடுத்துட்டோம்னு ஊர் முழுக்க சொந்த காசுல விளம்பரம் பண்ணிகிட்ட மாதிரி… இந்த மாரி2 படமும் பிரமாண்ட படம்னு சொந்த காசுல வௌம்பரம் பண்ணிக்க வேண்டியதுதான்…


ஒரு உண்மைய சொல்லணும்னா இந்த மாரி2 படம் கிறிஸ்மஸ் கொண்டாட்ட ரிலீஸ் பட்டியலில் திடீர்னு உள்ள நுழைஞ்ச படம்… இந்த பட வரவால தயாரிப்பாளர் சங்க ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டியே கலைஞ்சி ஓஞ்சி ஓடிப்போச்சின்னா பாருங்களேன்… ஏண்டா அவ்ளோ அவசரமா இந்த ஓட்டம் ஓடி வந்திருக்குன்னு பாத்தா பட ரிலீஸ் ஆன பிறகுதான் தெரியுது… படம் அவ்ளோ மொக்கை… தனியா வந்தா ஏற்கனவே குடுத்த பில்டப்புக்கு டப்பு எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சிடும்… கூட்டத்தோட கூட்டமா வந்தா டப்பு தேறாம போனாலும் கூட்டமா வந்த படங்களை சொல்லி தப்பிச்சிக்கலாம்னு ஒரு ஐடியா போல.


ஏம்பா தனுஷ் நீ நல்ல நடிகன்… ஏன் இந்த மாதிரி மொக்கையா விஷயமே இல்லாத கதைகளை தேர்வு பண்ணி நடிக்கிற… மாரி படமே பெருசா போகல இதுல பார்ட் 2 கதையே இல்லாம ஒரு படம்.
தமிழ் சினிமா ரசிகர்கள் முன்னாடிய விட இப்ப ரொம்ப தெளிவா இருக்காங்க… சூப்பர் ஸ்டாருக்கு மருமகனா இருந்தாலும் சரி… சூப்பர் ஸ்டாரே இருந்தாலும் சரி கதையோட வர்ற படமா இருந்தா கொண்டாடுறாங்க… பில்டப் மட்டுமே காட்டுற படங்களை டப்பா டான்ஸ் ஆட வைச்சிடுறாங்க….


விமர்சனம் தொடங்குறதுக்கு முன்னாடி கதைய ஒரு வரி அடிச்சிடலாம்னு யோசிச்சா… வார்த்தைய தேட வேண்டியிருக்கு… ஆமா இருக்காதா பின்னே கதைன்னு ஒன்னு இருந்தாதானே அதுவும் வரும்…


நல்ல கதை கேட்டு நடிச்சி பேர் வாங்கிட்டு இருக்கும் சாய்பல்லவி ‘அராத்து ஆனந்தி’யா மாறி ஆட்டோ ஓட்டுது… துறுதுறுன்னு அவ்ளோ கலரா இருக்குற சாய்பல்லவி ரவுடி மாரிய விரட்டி விரட்டி லவ் பண்ணுது. மாரியும் ரவுடிதனத்தை விட்டுட்டு பேமிலி லைப்ல வாழ ஆசைப்படுறார். அது நடந்துச்சா… இல்லியா… சாய்பல்லவியோட மாரி தனுஷ் ஹாப்பியா வாழ்ந்தாரா இல்லியான்னு சொல்றதுதான் மாரி2 கதை… அப்பாடா ஒரு வழியா கதைய கண்டுபுடிச்சிட்டேன்.


மாரில எடுபட்ட ரோபோ ஷங்கர் காமெடி மாரி2 படத்துல செல்ப் எடுக்காம பல எடத்துல முக்கி மொனகிகிட்டே இருக்கு… டிவியில ஸ்டாண்டப் காமெடி பண்ணிகிட்டிருந்த நிஷாவை நடிக்க வைச்சே தீரணும்னு தனி டிராக் போட்டிருக்காங்க… அந்த டிராக்கும் பிரேக் புடிக்காம போற வண்டிமாதிரி போய்கிட்டிருக்கு…
எப்பவுமே சொல்ற மாதிரி பாலாஜி மோகன்தான் இந்த படத்தை இயக்கியிருக்காரான்னு இப்பவும் சந்தேகம் வருது… அதுவும் ஒருவகையில அவருக்கு நல்லதுதான் படம் ஜெயிச்சா நான்தான்னு சொல்லிக்கலாம்… மொக்கையா போயிட்டா எஸ்கேப் ஆயிடலாம் பாருங்க…

அறம்பட நயன்தாரா மாதிரி காட்டன் புடவையில கலெக்டரா வர்ற வரலட்சுமி அவர் கேரக்டர் என்ன சொல்லுதுன்னு தனி குவிஸ் போட்டி நடத்தலாம் அந்தளவுக்கு புரியாத புதிர் வரலட்சுமி


வேற மொழியில பிரபலமா இருந்தாலும் டொவினோ தாமஸ் பண்ற வில்லத்தனம் பெருசா எடுபடல.
இந்த படத்துல ஒரே ஆறுதல் யுவனோட இசை. இளையராஜா குரல்ல ஒரு பாடல்.


மொத்தத்துல மாறி மாறி படத்துக்கு பெருசா பில்டப் குடுத்தாலும் போட்ட ‘டப்பு’ தேறுமா குடுத்த பேட்டா ‘பில்’ஆவது வருமான்னு தயாரிப்பாளரை மிரள வைச்சிருக்கிற படம் மாரி2.
மாரி3 வர்ற மாதிரி லீடு வேற குடுத்திருக்காங்க… அதுக்கு ஆஸ்பத்திரி வாசல்ல ரசிகர்கள் மைன்ட் வாய்ஸ்:
மச்சான் ‘மாரி ஜெனரல் வார்டு’டா… மாரி2 ‘ஐசியு’டா…
மாப்ள மாரி3ய பத்தி அடுத்து என்ன சொல்லப்போறேன்னு தெரியும்… வேணாம்..!

கோடங்கி மதிப்பெண்: 2/5

கோடங்கி

2,061 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன