வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கடம்பன் நல்ல முயற்சி..! விமர்சனம்

கார்ப்ரேட்டுக்களின் பார்வையிலும், தொழில் முனைவோர்களின் பணத்தாசையிலும் சிக்கி பாடுபடும் இயற்கை கொடையான காடு பற்றிய படம் கடம்பன்.

பிரமாண்ட வெற்று விளம்பரங்கள், பில்டப் அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்கு மத்தியில் ஒரு வாழ்வியலை வலியோடு சொல்ல முயற்சித்ததற்காக இயக்குனர் ராகவா பாராட்டப்படலாம்.
கதா நாயகனாக ஸ்டைல் காட்டி ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்த ஆர்யாவை மாற்றி உடல் மொழிகளில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கும் ஆர்யா கேரியரில் கடம்பன் முக்கியமானவன். கதை என்று பார்த்தால் அடர்ந்த காடு. அதற்குள் காலம் காலமாக வசிக்கும் மலைவாழ் மக்கள்.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றி விட்டு காட்டை சூரையாட முயற்சிக்கும் ஒரு கோஷ்டி. கடம்பன் ஆர்யா காட்டை காப்பாற்றினாரா… காதல் ஜெயிச்சதா என்பது மீதிகதை.
கதையின் மையகரு மிக அற்புத்மாமானது திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நலம்.

ஒளிப்பதிவு பல இடங்களில் பிரமிப்பு. பாடல்கள் பரவாயில்லை.
இயக்குனர் ராகவ் முதல் படமான மஞ்சப்பை சினிமாவில் கனமான மனித உணர்வை சொல்லி இருந்தார்.
இந்த படத்தில் அழிந்து வரும் இயற்கையின் உணர்வை வலியோடு சொல்லி இருக்கிறார்.

808 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன