செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

விண்வெளி பயண குறிப்புகள் – விமர்சனம்

 

ஸ்டெய்லா கூலிங்கிளாஸ் போட்டு கோட் போட்டு இடுப்புல லுங்கி கட்டி ஒருத்தர் வந்தா எப்படி இருக்கும்… அப்படி இருக்கு “விண்வெளி பயண குறிப்புகள்” படம்.

டைட்டில் மார்டனா வைச்சிட்டு கதை முழுக்க கிராமத்து வாசனையில் இயக்குனர் அசத்தி இருக்கார்.

அப்படி என்ன கதை…

 

ஊரில் பெரிய தாதா  ஆத்விக் ஜலந்தர் ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். பெண் அமைச்சர் ஒருவரின் ஆசியோட ஊரையே அடக்கி வைச்சிருக்கார். அவரை எதிர்க்க அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை.
ஜலந்தருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வரும் ஒருவர் விண்வெளி பற்றி பேச, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜலந்தர். விண்வெளிக்குச் செல்ல பல கோடிகள் வரை செலவாகும் என்றும், அந்த பணத்தை கொடுத்தால் விண்வெளிக்கு போக தான் உதவி செய்வதாக அந்த நபர் கூறுகிறார்.
இதுக்காக ஊர்ல இருக்கும் எல்லா பெரிய ஆட்களும் பணம் தரனும்னு ஜலந்தர் கண்டீஷன் போட பணம் கிடைச்சுதா… ஜலந்தர் விண்வெளி போனாரா என்பது தான் கிளைமாக்ஸ்.
ஒரு வரி தகவலை வைத்து ஒரு சினிமா எடுத்திருப்பது அதையும் யதார்த்தமாக கிராமத்து பின்னணியில் எடுத்து இருப்பது அருமை.
அத்விக் ஜலந்தர் சினிமா நடிப்பு என யோசிக்க வைக்காமல் ஜாலியாக நடித்து சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறார்.
கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை ஓரளவுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆர்.ஜெயப்பிரகாஷ், ஆர்.டி.லோகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
சமையல் செய்யும் பெண் தொடங்கி கிழவி வரைக்கும் கிராமத்தின் சாயல் அருமை.
கிளைமாக்ஸ் ஷாக் ரகம்… இப்படி ஒரு சினிமா தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்ப புதுசு. மொத்தத்தில் விண்வெளி பயணக் குறிப்புகள் தியேட்டருக்கு ஜாலி டிரிப் அடிக்க ஏத்த டிப்ஸ்.
– கோடங்கி
238 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன