வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

NEWS

டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது! இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையி...
நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு!

நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு! நாகாலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தும்போது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று பின்னர் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த கூலித் தொழிலாளர்கள். இவர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வேனில் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அப்போது இவர்கள் ஊருக்...
மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்!

மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்! காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார். சாணிக் காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். அடுத்ததாக திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது....
தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு!

தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு- சென்னை, திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு! சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. பல லட்சம் உயிர்களை பலி வாங்கியதோடு, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் வேகமாக பரவிய இந்த தொற்று மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகளும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் புதியதாக மரபணு உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வடிவில் உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் கர்நாடகத்தில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒமிக்ரான் பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இங்கிலாந்து...
மணிப்பூரில் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் சிக்கியது!

மணிப்பூரில் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் சிக்கியது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மணிப்பூரில் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் சிக்கியது! மணிப்பூர் மாநிலம் காங் போகிடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நாசவேலை கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் பாதுகாப்பு படையினர் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து அந்த கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது பயங்கர ஆயுதங்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்ததும் ஆயுதங்களுடன் இருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்....
அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்!

அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்! வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.  இது, இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும், மண்டலமாக மாறிய பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் 'ஜாவத்' புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி அன்று வடக்கு ஆந்திரா-ஒடிசா அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா! மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய சரத்பவார்,  வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆலோசித்ததாகவும் வலிமையான ஒரு மாற்றுத் தலைமை தேவை குறித்து விவாதித்ததாகவும் கூறினார். மம்தா பானர்ஜியுடனான விவாதம் தங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆளும் கூட்டணிக்கு மாற்றாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து கொண்ட கூட்டுத்தலைமை அமைய வேண்டும் எ...
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு! வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை அவரது பிள்ளைகளுக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவ...
கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது இன்னும் சில மணி நேரங்களில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின் மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் மழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்....
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு!

மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்... வலுக்கும் எதிர்ப்பு! நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார். தற்போது முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும் நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிள...