சினி நிகழ்வுகள்

வியாபார தளமாக மாறிய  ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !

வியாபார தளமாக மாறிய  ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !

சினி நிகழ்வுகள், செய்திகள்
 சென்னையில்  ஆரம்பத்தில் பெரிய அளவில் விளம்பரதாரர்கள் இல்லாத சமயத்திலும், அரசின் உதவிகளும் இல்லாத நிலையிலும், ஆனந்த் திரையரங்கம், பைலட் திரையரங்கம், போன்ற இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது, உலக திரைப்பட விழா !படங்களின் தேர்வுகளும் பாராட்டலாம்.டிசம்பர் இறுதியில் நடைபெற வேண்டிய நிகழ்வு புரட்சித் தலைவி மறைவாக தள்ளி வைத்து, தற்போது நடைபெற்று வருகிறது.இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிறமங்களை சந்தித்துள்ளதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.அதே சமயத்தில், காசினே போன்ற திரையரங்குகளில் ( நிர்வாகப் பணிகள் உட்பட ) திரைப்பட விழா நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது.வடபழனியில் உள்ள பலாசாவில் தினமும், பலர் அவமதிக்கப்படுகின்றனர். விழா குழுவினர் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.ஆர்.கே.வி ஸ்டுடியோஸ் ஆறுதல் என்றே சொல்லலாம், நன்றி.இந்த முறை சரியான படங்களையும் தேர்வு செய்யவில்லை, குறைந்த அளவே நல
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ”கொம்பு வைச்ச சிங்கமடா”  ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ”கொம்பு வைச்ச சிங்கமடா” ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
கொம்பு வைச்ச சிங்கமடா – ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் அருண்ராஜா காமராஜ்வரிகளில் ஜல்லிக்கட்டின் அருமைபெருமைகளை உணர்த்தும் பாடல் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராகஉலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாக ஒன்றினைந்து தங்களின்ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும்நிருபித்துள்ளனர். மக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்குஆதரவு அளித்து வருகின்றனர். ஆதரவளித்தவர்களில் மிகவும்முக்கியமானவர் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜல்லிக்கட்டு எங்கள் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், ஆகவேதடையை விளக்குங்கள் என்று உரக்க குரல் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்குமார், மேலும் தனது ஆதரவை வலுப்படுத்த ஜல்லிகட்டின் மகிமைமற்றும் தமிழருக்கும் ஜல்லிக்கட்டிற்க்குமான சொந்தத்தைஉணர்ச்சிப்பூர்வமாக கூறும் “கொம்பு வைச்ச சிங்கமடா” எனும் பாடலைஇசையமைத்து வெளியிட்டு
ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி

ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி

சினி நிகழ்வுகள், செய்திகள்
மும்பையில் நடந்த தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தின் சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. வின் டீசலின் தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தான் தீபிகா நடித்துள்ள முதல் ஹாலிவுட் படம் ஆகும். இந்நிலையில் வின் டீசல், படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் மும்பை வந்துள்ளனர்.மும்பையில் தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், இர்பான் கான், நீல் நிதின் முகேஷ் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா தங்க நிற கவுன் அணிந்து வந்திருந்தார். அவர் முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்

ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்

சினி நிகழ்வுகள், செய்திகள்
ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் ரகுமானின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இவர் அடுத்ததாக ஆடும் ஆட்டம் ‘பகடி ஆட்டம்’.மாறம் மூவீஸ் மற்றும் பரணி மூவீஸ் பெருமையுடன் வழங்கும் படம் ‘பகடி ஆட்டம்’. இப்படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். ராம் கே.சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.வி.டி. நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது.இப்படம் குறித்து இயக்குனர் ராம் கே.சந்திரன் கூறும்போது, ‘எல்லா வசதியும் கொண்ட ஒரு ஆணுக்கும், அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வாழும் பெண்ணுக்கும் இடையேயான கதைதான் ‘பகடி ஆட்டம்’. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் எப்படி ப
எதிர்த்து குரல் கொடுத்த ஆர்யா நடிப்பில்  சந்தனதேவன் பெயரில் ஜல்லிக்கட்டு கதை எடுக்கும் அமீர்

எதிர்த்து குரல் கொடுத்த ஆர்யா நடிப்பில் சந்தனதேவன் பெயரில் ஜல்லிக்கட்டு கதை எடுக்கும் அமீர்

சினி நிகழ்வுகள், செய்திகள்
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி...' - அமீர் இயக்கும் சந்தனத் தேவன்! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு சந்தனத் தேவன் என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பை மென்மையாக வைத்து விட்டு கதையில் தீவிரத்தை காட்ட திட்டமிட்டிருக்கிறார் அமீர்.இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த ஆர்யாதான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பல கருத்துக்களை கூறியவர். இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். வழக்கமாக அமீர் படங்களில் சர்ச்சைகளும், சலசலப்புகளும் ஏற்படுவது வழக்கம். இந்த சந்தனதேவன் பட கதையும் பல சர்ச்சைகளையும், சலசலப்புகளை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.படத்தின் முதல் தோற
வீரையன் பாடல் வெளியீடு

வீரையன் பாடல் வெளியீடு

சினி நிகழ்வுகள்
இனிகோ பிரபாகர் நடிப்பில் கதாநாயகி ஷைனி ஜோடி சேர்ந்துள்ள ‘வீரையன்’ படத்தை பரீத் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இன்று காலை வெளியிடப்பட்டது. 
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன.தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த ’இன்டோ சினி அப்ரிசிசேஷன்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை நகரில் நடத்தி வருகிறது.அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 5 முதல் 12 வரை ஒருவார காலத்துக்கு இந்த விழா ந
ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சினி நிகழ்வுகள், செய்திகள்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார்.நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள்.பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத

60-வது பிறந்தநாள் : பிரபுவை வாழ்த்திய ரஜினி

சினி நிகழ்வுகள்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27-ந் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி இன்று பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர். ரஜினியும் பிரபுவும் ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.சினிமாவையும் தாண்டி, ரஜினியும், பிரபுவும் நிஜ வாழ்க்கையிலும் உடன்பிறவா சகோதரர்களாக இருந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிர