வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

சினி நிகழ்வுகள்

சீயான் ’விக்ரமின் ‘மகான்’ படத்திலிருந்து ‘போனா போவுறான்னு பாடல் ரிலீஸ்!

சீயான் ’விக்ரமின் ‘மகான்’ படத்திலிருந்து ‘போனா போவுறான்னு பாடல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘சீயான் ’விக்ரமின் 'மகான்' படத்திலிருந்து 'போனா போவுறான்னு..' எனத் தொடங்கும் புதிய பாடல் வெளியானது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'மகான்'. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் அறுபதாவது திரைப்படமான 'மகான்' படத்திலிருந்து மூன்றாவது பாடலாக 'போனா போவுறான்னு..' எனத் தொடங்கும் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடல் தமிழைத் தவிர தெலுங்கில் 'போதே போனி..' என்றும், மலையாளத்தில் 'வேண்டா வேண்டா என்னு...' என்றும், கன்னடத்தில் ' ஹோட்ரே ஹோக்லி அன்டே..' என்றும் இந்தப்பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். நீங்கள் யாரையாவது விரும்பும்போது அவர்கள் உங்களை விரும்பவில்லை என்றால், அவர்களை விடுவித்து விடுங்கள் என்பதை நுட்பமான செய்தியுடன் கூடிய பாடலாக 'போனா போவுறான்னு..' என்ற பாடல் அமைந்திருக்கிறது. ‘சீயான்’ வ...
”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுவாரசியமாக உருவான இந்த வெப் தொடர...
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்! விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் வரும் 11.02.2022 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்....
இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது!

இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது! பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும் மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த வருடம், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, இயக்குனர் மணிரத்னத்திற்கு வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி இணைய வழியில் ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிப்பை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்....
அமீருடன் இணைந்த வெற்றிமாறன்!

அமீருடன் இணைந்த வெற்றிமாறன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பயணித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இது குறித்து அமீர் வெளியிட்ட தகவலில், "எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்புகள் வெளிய...
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 2 நாட்கள் அறிகுறி இருந்ததாகவும், பரிசோதனையில் கொரோனா பாதித்துள்ளது தெரியவந்ததாகவும் கூறினார். மேலும் தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்....
பிரமாண்ட வெளியீடாக பன்மொழிகளில் வெளியாகிறது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

பிரமாண்ட வெளியீடாக பன்மொழிகளில் வெளியாகிறது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிப்ரவரி 4, பிரமாண்ட வெளியீடாக பன்மொழிகளில் வெளியாகிறது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் ! விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ...
மாலத்தீவில் மாளவிகா மோகனன் பிகினி அட்ராசிட்டி…

மாலத்தீவில் மாளவிகா மோகனன் பிகினி அட்ராசிட்டி…

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். தற்போது மாலத்தீவு சென்றுள்ள மாளவிகா பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது                                      ...
அப்பாடா ஒரு வழியா அஜித்தின் வலிமை ரிலீஸ் அப்டேட் வந்துடுச்சி!

அப்பாடா ஒரு வழியா அஜித்தின் வலிமை ரிலீஸ் அப்டேட் வந்துடுச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்தார். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றது இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பெரும்பா...
உதயநிதி வெளியிடும் சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”

உதயநிதி வெளியிடும் சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கிய பாண்டிராஜ், மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ளார். அவர்கள் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடித்திருக்கும் இந்தப் படமும் பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களைப் போன்ற கிராமத்துப் பிண்ணனியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது. இதில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதன் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிப்ரவரி 4-ஆம...