வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

செய்திகள்

கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி! ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. மறுநாள் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முந்தைய நாள் மதியம் 1 மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு, முந்தைய நாள் காலை 9 மணிக்கு பிறகு மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த ஏராளமான ப...
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி! கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கோட்டயம் மாவட்டம் கொல்லம்பரம்பில் பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு சீட்டை ...
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது ! தேர்தல் நடக்கும் சமயங்களில் வாக்காளர்கள் மிக எளிதாக வாக்கு அளிப்பதற்காக வாக்காளர் சீட்டு வழங்குவது வழக்கத்தில் உள்ளது. முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர் சின்னத்துடன் வாக்காளர் சீட்டு அச்சடித்து வீடுவீடாக வினியோகம் செய்வார்கள். அரசியல் கட்சிகள் வாக்காளர் சீட்டுகளை வினியோகிப்பதால், குழப்பம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வாக்காளர்களுக்கு சீட்டு வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையமே மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண் வாக்காளர்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் வாக்களிப்பதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவ...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ்க்கு கொரோனா! மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வலிமையுடன் திரும்பி வருவேன் என்று அவர் கூறியுள்ளார்....
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் வீடியோ!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் - வைரலாகும் வீடியோ! அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘பைரவா’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன். அடுத்ததாக தனுஷின் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் நடுவில் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ர...
அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்களும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை இடமாற்றம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையும் களமிறங்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் அரசியல் கட்சியினரின் நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்...
போராடி மீட்ட சரக்கு கப்பல்!

போராடி மீட்ட சரக்கு கப்பல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் போராடி மீட்பு! ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம் டன் பெட்டகங்களுடன் சென்ற ஜப்பானின் ‘எவர்கிவன்’ என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் சென்ற போது தரை தட்டி நின்றது. இந்த கப்பல் கால்வாய் முழுவதையும் அடைத்துக் கொள்ளும் வகையில் திரும்பி நின்றதால் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்கு வரத்து முழுமையாக தடைபட்டது. உலகின் 15 சதவீத கப்பல் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது. இதனால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. கச்சா எண்ணை, கால்நடைகள் மற்றும் பல்வேறு சரக்குகளுடன் வந்த நூற்றுக்கணக்கான கப்பல்கள் சூயஸ் கால்வாயில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதால் ஆசிய நாடுகளுக்...
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு!

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு! ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரத...
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா! பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்பின் அவர் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சசிகலா தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் அ.ம.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 6 மணிக்கு சசிகலா திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கார் மூலம் ராமேசுவரத்திற்கு சென்றார். இரவு அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு நுழைவு வாயிலில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற் பளிக்...
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு! தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம்-உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது, பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக. இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்க வேண்டாம் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக. அதிமுகவின் முகக் கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் பாஜகதான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் பாஜகவினால் இயக்கப்படும் அதிமுக உள்ளது. அமித்ஷா மோகன் பகவத் காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார்கள், ஆனார் அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத் துறை மத்த...