Photos

பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

CINI NEWS, HOME SLIDER, Photos, செய்திகள், நடிகர்கள்
பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் (வயது 82) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெண்டு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர், நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.கடைசியாக இவர் சிம்பு நடிப்பில் வெளியான `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!

மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!
செக்கச் சிவந்த வானம் – முக்கிய தகவலை வெளியிட்ட அரவிந்த்சாமி

செக்கச் சிவந்த வானம் – முக்கிய தகவலை வெளியிட்ட அரவிந்த்சாமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார்.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் நடிகர்கள் 4 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், அரவிந்த்சாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,`செக்கச் சிவந்த வானம் படத்தில் எனது காட்சிகளை முடித்துவிட்டேன், மணி சார் மற்றும் அவரது குழுவுடன் பணியாற்றுவது எப்போதுமே மிகச்சிறந்த அனுபவம் தான். இதில் `செக்கச் சிவந்த வானம்' படம் கொஞ்சம் ஸ்பெஷலானது, என்பதை உணர முடிகிறது. ஒரு சிறய இடைவேளைக்குப் பிறகு, வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புரமோஷனில் பங்கேற்க உள்ளேன்' என்று குறிப
இன்று முதல் படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

இன்று முதல் படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.சிவா - அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கிறது. இதற்காக நடிகர் அஜித் ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.ஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்
நாடோடிகள்-2 கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது – சமுத்திரக்கனி

நாடோடிகள்-2 கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது – சமுத்திரக்கனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார்.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய
ஒரு வழியாக பொட்டு ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

ஒரு வழியாக பொட்டு ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு'.வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போன நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதேபோல் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தாலும் அணைக்கு வரும் நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும்.ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறிப்பிட்ட காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ம
அங்காடிதெரு மகேஷ் –  ஷாலு  நடிக்கும்  “ என் காதலி சீன் போடுறா “

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்,மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது ... இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை  சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற
நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
தினமும் நடைப்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உறுதி. என்றாலும், நடைப்பயிற்சி மட்டுமே போதாது. உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை, இது புரதத்துடன் இணைந்து ‘கொழுப்புப் புரதமாக‘ மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகரித்தால் ஆபத்து காத்திருக்கும். கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல். என மூன்று வகைப்படும். இவற்றில், எல்.டி.எல்.லும், வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. இவை இரண்டும் கல்லீரலில் இருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் ‘கெட்ட கொழுப்பு‘ என்கிறோம்.அதே வேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு
இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
 கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, க