செய்திகள்

இராவுத்தர் குடும்ப தயாரிப்பில் ஆரியின் படம்!

இராவுத்தர் குடும்ப தயாரிப்பில் ஆரியின் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்'.இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெடுஞ்சாலை' புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" எனும் படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தின
எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ்..!

எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்...இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை பூஜையுடன் துவங்கி  உள்ளார்கள்...இன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது.இசை  -  C.சத்யா..மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட்....மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது
காதல் எதுவும் இல்லை… ஸ்டில் ஐ அம் சிங்கிள்!  சொல்கிறார் ஜெய்!

காதல் எதுவும் இல்லை… ஸ்டில் ஐ அம் சிங்கிள்! சொல்கிறார் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தான் நடிக்கும் பட விழாக்களுக்கு வருவதில்லை… பத்திரிகையாளர் யாரையும் சந்திப்பதில்லை… காதலில் மாட்டிக் கொண்டார்… என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகள் ஜெய்யை சுற்றி சுற்றி வந்த போது பெரிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நடிகர் ஜெய் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.இசையமைப்பாளர் தேவா அப்பா அலுவலகத்திற்கு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்போதெல்லாம் பல உதவி இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பேசும் போது அவர்கள் பத்து வருடங்கள் உதவி இயக்குனர்களாக இருந்த பட்ட கஷ்டங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.ஒரு உதவி இயக்குனர், இயக்குனராக பட வாய்ப்பு கிடைப்பதென்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது தெரியும். அதனால்தான், இதுவரை நான் நடித்துள்ள பல படங்களில் அறிமுக இயக்குனர்களே அமைந்திருக்கிறார்கள்.பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தால் தொடர்ந்து என
பீச்சாங்கை நடிகரின் தெருக்கூத்து கலையை சொல்லும் புதுப்படம்!

பீச்சாங்கை நடிகரின் தெருக்கூத்து கலையை சொல்லும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பீச்சாங்கை" பட  நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.பீச்சாங்கை பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த  நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது புதியதாக  ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்பாடாத இப்படம், 1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் நாயகியாக நடிக்கிறார்.இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், நடனம் ராதிகா மாஸ்டர்,சன்டைப்பயிற்சி வீரா,M.G.M. நிறுவனம் தயாரிக்க, இணைத்தயாரிப்பாக  ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்க,  படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.முதலாம் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது  இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே
பரபரப்பாகும் யோகிபாபுவின் தர்மபிரபு ஷூட்டிங்..!

பரபரப்பாகும் யோகிபாபுவின் தர்மபிரபு ஷூட்டிங்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
யோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.இப்படத்தில் யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல
மவுனம் கலைக்கும் பாடகி சின்மயி… வீடியோ பேட்டி பாகம் 3

மவுனம் கலைக்கும் பாடகி சின்மயி… வீடியோ பேட்டி பாகம் 3

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
https://youtu.be/4reCtJIyhEQமனம் திறக்கும் சின்மயி! டப்பிங் யூனியன் ஊழலை போட்டு உடைக்கும் தாசரதி!! - பாகம் 3- #chinmayiInterviewhttps://youtu.be/4reCtJIyhEQ
“கிண்டில் கிட்ஸ்” பாடதிட்டத்தை தொடங்கி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்..!

“கிண்டில் கிட்ஸ்” பாடதிட்டத்தை தொடங்கி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழுமநிறுவனருமான டாக்டர்ஐசரி .கே.கணேஷ் கிண்டில்கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத்திட்டத்தை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கி வைத்தார். Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகாரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் ஆண்டோனியோஸ்ரகுபான்ஸே, (தலைவர்பிரிட்டிஷ்கவுன்சில்கல்விப்பணி) அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இச்சர்வதேச ப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியபணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ளசி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறுபாடதிட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும்வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இ
பூமரங் டீம் மீண்டும் இணைகிறது..!

பூமரங் டீம் மீண்டும் இணைகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து போனதோ அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது 'பூமராங்' என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. ஆம், மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் "பூமராங்" படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கண்ணன், நடிகர் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். "தயாரிப்பு எண் 3" என்ற தலைப்பில் துவங்கப்படும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தன் மசலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இயக்குனர் கண்ணன் கூறுகையில், "ஆம், நாங்கள் 'பூமராங்கிற்கு' பிறகு மீண்டும் இணைவதில் உற்சாகமடைகிறோம். 'பூமராங்' மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதில் நாங்கள் இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் படத்தின் உரிமையை trident ஆர்ட்ஸ் ரவி அவர்கள் பெற்று இருப்பதை பெருமையாக கருதிகிறோம். மேலும், பூமராங் முடியும் முன்ப
சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு பரிசு  கொடுத்த நயன்தாரா..!

சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு பரிசு கொடுத்த நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்.