சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Uncategorized

ஆழமில்லா குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்துக் கொண்ட நடிகை!

Uncategorized
ஆழமில்லா குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்துக் கொண்ட நடிகை! ஆஸ்திரேலிய நடிகையான அல்லி சிம்ப்சன், ஆழம் அதிகம் இல்லாத ஒரு குளத்தில் ‘டைவ்’ அடித்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்து உடைந்துபோனது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் தான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என்றும், 4 மாதங்களுக்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார். சிகிச்சையில் இருந்தவாறு அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் ...
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மறுத்து விவசாயிகள் எதிர்ப்பு!

Uncategorized
  சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்ததில் கீழடியின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு சுற்றி கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது தற்போது கடைசியாக கீழடியில் , ஏழாம் கட்ட அகழாய்வுப் நடந்து முடிந்தது, இந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியமாக இருக்கும் மக்கள் எப்பொழுதும் வந்து பார்த்து செல்லலாம் என்று தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாக அகழ்வாய்வு செய்த இடங்களை விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி அகழாய்வு செய்துவிட்டு பிறகு குழிகளை மூடி விவசாயிகளிடம் நில...
“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

Uncategorized
கூட்டத்திற்கு ஆளே இல்லை... காலி சேர்களால் “உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல் செய்கிறார் என பஞ்சாப் முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் தண்டாவில் ரூ.18 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- பஞ்சாப் வந்த பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு கூட்டமே வரவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. எனவே, அற்பமான காரணத்தை கூறி திரும்பி சென்று விட்டார். மோடி, நாட்டின் மதிப்புக்குரிய தலைவர். இத்தகைய மலிவான தந்திரத்தை கையாள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி செய்கிறார்கள். அதற்குத்தான் இந்த நாடகம் ஆடுகிறார்கள். போராட்டக்காரர்...
விருதுநகர் போலீசாரிடம் ராஜேந்திர பாலாஜி ஒப்படைப்பு!

விருதுநகர் போலீசாரிடம் ராஜேந்திர பாலாஜி ஒப்படைப்பு!

Uncategorized
விருதுநகர் போலீசாரிடம் ராஜேந்திர பாலாஜி ஒப்படைப்பு! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் இன்று கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர். ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி புகார் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன்ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுக்கள் கீழ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தள்ளுபடி ஆனது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டை நாடினார். முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதற்குள் தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை சுற்றிவளைத்து கைத...
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது எப்படி? அமைச்சர் ஆலோசனை

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது எப்படி? அமைச்சர் ஆலோசனை

Uncategorized
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது, காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இந்த சூழலில், மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளை கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் நடத்துவது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் ந...
நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம்

நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம்

Uncategorized
சேவை வரி செலுத்தாததால், நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஷாலின் விசால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாததை கண்டறிந்தனர். அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் விஷால் ஆஜராகாமல் காலம்தாழ்த்தி வந்ததால் வருமானவரித்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சேவை வரித்துறையில் அவர் ஆஜராகாததாது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுவதாகவும், அதனால் நடிகர் ...
மருத்துவமனையில் சிம்பு அனுமதி

மருத்துவமனையில் சிம்பு அனுமதி

Uncategorized
மருத்துவமனையில் சிம்பு அனுமதி நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.    ...

அமெரிக்காவில் ரூ. 21.11 கோடிக்கு ஏலம் போன மாவீரர் நெப்போலியனின் போர்வாள்

Uncategorized
அமெரிக்காவில் ரூ. 21.11 கோடிக்கு ஏலம் போன மாவீரர் நெப்போலியனின் போர்வாள் மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார். 1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ...
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

Uncategorized
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு! விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்சமயம் சீயான் 61 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்!

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்!

Uncategorized
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்! பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கமல் தற்போது லோகேஷ் ...