politics

ஈ ஓட்டாமல் கொசு விரட்டியிருக்கலாம்… கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

ஈ ஓட்டாமல் கொசு விரட்டியிருக்கலாம்… கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
 நிலவேம்பு கஷாயம் வழங்கும் விஷயத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு செய்தி அவருக்கு எதிராக திருப்பப்பட்டதால் மீண்டும் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனா
அதிமுக தோன்றிய நாள்… ஒரு பிளாஷ்பேக் – ஆந்தையார்

அதிமுக தோன்றிய நாள்… ஒரு பிளாஷ்பேக் – ஆந்தையார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
🔥தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை."அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். 1972 இதே அக்டோபர் 18ந் தேதி இக்கட்சி உதயமாயிற்று.பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர் நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்
புதிய ஆளுநர் சுதந்திரமாக, நடுநிலையாக செயல்படுவார் என நம்புகிறேன்’ – மு.க.ஸ்டாலின் அறிக்கை

புதிய ஆளுநர் சுதந்திரமாக, நடுநிலையாக செயல்படுவார் என நம்புகிறேன்’ – மு.க.ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
 தமிழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட அறிக்கையில், "அறிக்கையில், "தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு,
ஜெனிவாவில் வைகோ சிலம்பாட்டம் வைரல் ஆகும் வீடியோ

ஜெனிவாவில் வைகோ சிலம்பாட்டம் வைரல் ஆகும் வீடியோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
 😍மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ உரையாற்றினார்.  வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்துக்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இனப்படுகொலை செய்த ராணுவத்தினரில் சிலரும் அந்த கூட்டத்தில் இருந்ததாக வைகோ தெரிவித்திருந்தார்.வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கினர். வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்த நிலையி
சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து – அதிமுக பொதுக்குழு தீர்மானம்

சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து – அதிமுக பொதுக்குழு தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
 சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து; தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது உட்பட அதிமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.01.கட்சியையும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் 02.ஜெயலலிதா இறந்த போது, அவரவர் வகித்த பதவிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும். 03.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள் 04.ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் தமிழக அரசுக்கு நன்றி 05.புயல், வெள்ளம், வறட்சி பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு 06.ஜெ., மறைவுக்கு பிறகு எதிரிகளுக்கு இடம் தராமல் கட்சியை கட்டுகோப்பாக நடத்தும் நிர்வாகிகளுக்கு பாராட்டு07.அதிமுகவில் பொது செயலர் பதவி ரத்து 08.சசிகலா வகிக்கும் தற்காலிக பொது செயல
மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

HOME SLIDER, politics, செய்திகள்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என தமிழக சட்டபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது:-நடப்பாண்டில் ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.1. 2015-16ஆம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 2017-18ஆம் ஆண்டில், 800 கோடி ரூ