வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: விஜய்

“நா ரெடி” பாடல் படைத்த புதிய சாதனை!

“நா ரெடி” பாடல் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'லியோ' படத்தின் "நா ரெடி" பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் யூடியூபில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருக...
ட்ரெண்டாகும் ‘வாரிசு’படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!

ட்ரெண்டாகும் ‘வாரிசு’படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து சமீபத்தில் 'வாரிசு' திரைப்படம் 50 நாட்களை கடந்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் போஸ்டர்கள் வெளியிட்டு கொண்டாடினர் . இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியின் வீடியோவை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. https://twitter.com/PrimeVideoIN/status/1631649056547291137?s=2...
லியோ – தளபதி 67 படம் நான்கு மொழிகளில் மட்டும் வெளியாகிறது!

லியோ – தளபதி 67 படம் நான்கு மொழிகளில் மட்டும் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இப்படத்தின் டைட்டில் புரோமோ நேற்று மாலை வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் விஜய் மலையாள ரசிகர்களை தவிர்த்தாரா..? என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. அதாவது, 'லியோ' திரைப்படத்தின் டைட்டில...
வென்றது விஜயின் வாரிசா?அஜித்தின் துணிவா?..

வென்றது விஜயின் வாரிசா?அஜித்தின் துணிவா?..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் யாருடைய திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது என்று கடும் போட்டி நிலவி வருகிறது. உலகளவில் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் துணிவு படம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த 9 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே துணிவு திரைப்படம் ரூ. 98 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ. 97 கோடியும் வசூல் செய்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் துணிவு திரைப்படத்தின் வசூல் முதலிடத்தை அப்படியே தக்க வைத்துள்ளது என தெரிகிறது....
வாரிசு வசூல் ரூ.210 கோடி – 200% வாய்ப்பில்லாத ஒன்று.. திருப்பூர் சுப்ரமணியன் அதிரடி!

வாரிசு வசூல் ரூ.210 கோடி – 200% வாய்ப்பில்லாத ஒன்று.. திருப்பூர் சுப்ரமணியன் அதிரடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் வாரிசு படத்தின் வசூல் குறித்து விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் கூறியதாவது, ப...
துணிவு – வாரிசு கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

துணிவு – வாரிசு கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திரையரங்க அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் வாரிசு மற்றும...
விஜய்யை பாராட்டிய ஷாருக்கான்!

விஜய்யை பாராட்டிய ஷாருக்கான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ...
வெளியான வாரிசு டிரைலர் அறிவிப்பு!

வெளியான வாரிசு டிரைலர் அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. வாரிசு படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தது. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அற...
நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், "துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று விஜய்யிடம் சொன்ன போது வரட்டும் பா. நம்ம நண்பர் படம்தானே.. அதுவும் நல்லா போகட்டும்.. நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த கருத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளன...
விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் !

விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுர...