Uncategorized

ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர்  ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உ

Uncategorized
முதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது "தயாரிப்பு எண் 2" படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன. படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள் பதிவு: ஜூன் 20, 2018 21:49

சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள் பதிவு: ஜூன் 20, 2018 21:49

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள்
நாளை மறுநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விஜய் 62 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியது முதலே அதற்கான கொண்டாட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் விஜய் பிறந்தநாளுக்கும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேற
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் அவசரநிலை

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் அவசரநிலை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்க முயன்ற போது, பிரேக் பகுதியில் உள்ள ஹைட்ராலிக் இயங்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 15 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி

விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம்-திரிஷா நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் குவித்த ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டிரெய்லரை நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கேலி செய்தார். “முந்தா நாள் வந்த டீஸரில் கலாய்த்திருந்த அத்தனை சீன்களையும் ஒன்று சேர்த்து ஒரு டிரெய்லர் ஸ்ஸப்பா..” என்று அவர் பதிவிட்டார். கஸ்தூரி முந்தா நாள் வந்த டீஸர் என்று குறிப்பிட்டது. சிவா நடித்துள்ள தமிழ் படம்-2 டிரெய்லரைத்தான். அதில் நிறைய படங்களை கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. கஸ்தூரி அதில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். சாமி-2 படத்தின் டிரெய்லரை கஸ்தூரி விமர்சித்தது விக்ரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த “உன் பேரன் பேத்திகள்
பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி

பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள். தற்போது இந்த புதிய படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் – சாதிப்பாரா? சறுக்குவாரா?

8 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் – சாதிப்பாரா? சறுக்குவாரா?

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேனாக இருக்கும் இவர் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். கடந்த 2004-ம் ஆண்டு மும்மையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 19 வயதில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார். அதன்பின்னர், தோனி இந்திய அணிக்குள் நுழைந்ததும் அவரது சிறப்பான செயல்பாட்டால் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பராக தோனி இருக்கும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரை சேர்க்க அணி நிர்வாகம் விரும்பவில்லை. கடைசியாக 2010-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான போட்டி தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி டெஸ்ட்  ஆகும். அதன் பின்னர், இம்மாதம் 14-ம் தேதி பெங்களூரில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாட உள்ளார். முதலில் விருத்திமான் சாஹா தேர்வாகியிருந்தார். காயம் கார
துப்பாக்கிச்சூட்டில் பலியான மீதமுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி

துப்பாக்கிச்சூட்டில் பலியான மீதமுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்ப
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த ப்ளாஷ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடித்து பின்னணி வேலைகளில் ஈடுபட இருக்கிறார்கள். இதனையடுத்து, டீசர், டிரைலர்கள் வெளியிட இருக்கிறார்கள். பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதால், இப்படத்தின் மீது அத
காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்

காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்

CINI NEWS, HOME SLIDER, politics, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட கன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி குமாரசாமியை நேற்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த வி‌ஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- தண்ணீர் பிரச்சனையோ அல்லது வேறு எந்த பிரச்சனையோ மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டால், அதை  த