செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19
Shadow

முன்னோட்டம்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்! பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை ராஜமவுலி வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா நடிப்பதா...
ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்!

ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள், முன்னோட்டம்
ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்! இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது. அப்போது இந்தியா உள்பட 14 நாட்கள் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணித்தன. வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலா உள்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், நமிபியா, கேமரூன், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது....
சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?

சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், முன்னோட்டம்
சட்டசபை தேர்தலில் சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு? தலைநகர் சென்னை வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையாக திகழ்கிறது. தொடக்கத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பலரும் சென்னைக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பெறுவது சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.   ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய வட மாநிலத்தவர்களோ வாக்குரிமை, ஆதார் கார்டு, லைசென்சு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள ஆவணங்களை பெற்று, தற்போது பூர்வீக சென்னைவாசிகளாகவே மாறி விட்டார்கள். சென்னை நகரின் பல இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மொழி அல்லாத வட மாநிலத்தவர்க...
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்! விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்டார். காலையில் பிரசார பாடல் ஒலிப்பேழையை வெளியிட்ட அவர் மாலையில் திருக்கழுகுன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர் (பொதுக்கூட்டம்) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். இன்று (செவ்வாய்கிழமை) மாலை பவுஞ்சூர், செய்யூர், சித்தாமூர் கூட்டுச்சாலை, சூனாம்பேடு ஆகிய இடங்களில் திருமாவளவன் பேசுகிறார். இரவு 7 மணிக்கு கடப்பாக்கம், கல்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை (24-ந் தேதி) சென்னையில் 6 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 4 மணிக்கு திரு.வி.க. நகர், 5 மணிக்கு எழ...
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி! அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை. நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய...
2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்!

2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள், முன்னோட்டம்
2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்! சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1960-ல் கொண்டுவரப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக நீடித்த ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி தரவுகளை பகிர்ந்துகொள்வதற்காகவும், ஒப்பந்தப்படி நீரை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காகவும் நிரந்தர சிந்து ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையமானது ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு ஒரு முறையாவது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி சந்தித்து பேசவேண்டும். கடைசியாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளின் சிந்து நதி ஆணைய உறுப்பினர்கள் லாகூரில் சந்தித்து பேசினர். அதன்பின்னர், புல்வாமா தாக்குதல் காரணமாக 201...
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை  மறித்த தேர்தல் பறக்கும் படை!

நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை! தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பயணித்த பிரசார வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனின் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு கமல் ஹாசன் தனது பயணத்தை தொடர்ந்தார்....
ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்’ வேலை பார்க்கும் இளம்பெண்!

ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்’ வேலை பார்க்கும் இளம்பெண்!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள், முன்னோட்டம்
ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்' வேலை பார்க்கும் இளம்பெண்! ஆணுக்கு பெண் சமம் என்று கூறி வந்தாலும், ஏட்டில் எழுதி வந்தாலும் சில வேலைகள் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை காலம் காலமாக நிலவி வருகிறது. ஆனால் அதை தற்போதைய இளம்பெண்கள் முறியடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் ஒரு பெண் திகழ்கிறார். கவுந்தப்பாடி அருகே உள்ள சேவாக் கவுண்டனூரை சேர்ந்தவர் ராசா. இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 29). இவருக்கும், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. சமீபத்தில் மின்வாரியத்தில் கேங்மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதையறிந்த திருநாவுக்கரசு அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். மேலும் மனைவி ராஜேஸ்வரியையும் விண்ணப்பிக்க சொன்னார். இதைத்தொடர்ந்து வி...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு

பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் 'ரணகளம்' பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் 'ரணகளம்' பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த 'தாதா 87' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை அவர் பெற்றார். தாதா 87 வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி தான் தற்போது 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' (PUBG) படத்தையும் இயக்குகிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. பப்ஜி படத்திற்கு இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே தாத...