சனிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

உலக செய்திகள்

விண்வெளி நிலைய பணி – சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்!

விண்வெளி நிலைய பணி – சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
விண்வெளி நிலைய பணி - சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்! சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. தியான்ஹே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், (56) லியு போமிங் (54) மற்றும் டாங் ஹோங்போ (45) ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர்...
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு! அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது. சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட...
மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்! 20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ் தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரிதாபம் நேர்ந்திருக்கிறது. துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலிபான் ஆளுகையில் நமது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆப்கானிஸ்தானியர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் மூட்டை, முடிச்சுகளோடு, பிள்ளை குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானிய மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கே போவது, எப்படி போவது, எதில் போவது என எதிலும் திட்டமிடப்படாத கண்ணீர் வாழ்க்கை, அவர...
அன்று ஆப்கான் மந்திரி… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!

அன்று ஆப்கான் மந்திரி… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அன்று ஆப்கான் மந்திரி... இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்! சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி. வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கனி  அரசில் மந்திரியாக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத், தற்போது ஜெர்மனி நகரம் ஒன்றில் பீட்சா டெலிவரி நபராக வேலை பார்க்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு அஷ்ரப் கனி  மந்திரிசபையில் சதாத் இணைந்தார். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக பதவி வகித்த அவர், பின்னர் அப்பொறுப்பில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனியின் லீப்சிக் நகருக்கு இடம் பெயர்ந்த சதாத், தற்போது அங்கு பீட்சா டெலிவரி நபராக பணியாற்றுகிறார். பீட்சா டெலிவரி பையுடன் அவர் சைக்கிள் ஓட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றிருக்கின்றன. ஆனால் முன்னாள் ஆப்கான் மந்திரி சையத் அகமது ஷ...
வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்!

வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்! அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டம், போட்கான் கிராமத்தில் அலகாபாத் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து சந்கேமடைந்த போலீசார், செங்மாரி என்ற இடத்தில் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைக் கும்பல் வங்கி லாக்கரை வெல்டிங் செய்து உடைப்பதற்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டர், ஆக்சிஜன், இரும்பு கம்பி, இரண்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். வங்கிக் கொள்ளையை சரியான சமயத்தில் தடுத்ததுடன், கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற அசாம் காவல்துறையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர...
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு விமானத்தில், இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றொரு விமானப்படை விமானத்தில் மீதியுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தூதரகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தலிப...
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான்  தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் நிர்வாக தொடர்புக...
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்! ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப...
தமிழனை வைத்து தமிழகத்தை உளவு பார்க்க சதி செய்கிறதா இலங்கை?!

தமிழனை வைத்து தமிழகத்தை உளவு பார்க்க சதி செய்கிறதா இலங்கை?!

NEWS, உலக செய்திகள்
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.அவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதலாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாட்டில் உள்ள முக்கிய வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். அதன்படி இந்தியாவிற்கு வந்தவர், முதலில் கேரள மாநிலத்தில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெங்டேஷ்வரன், தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்தார். அதன்பிறகு காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கையில் சீனா துறைமுகத்தை கட்டமைத்து வருகிறது. இலங்கையை தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை தீட்ட சீனா திட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதன் ஒரு பகுதியாகத்தான் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ர...