சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

helth tips

மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவர் ஆதரவு!

மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவர் ஆதரவு!

helth tips, HOME SLIDER, NEWS, உடல் நலம், செய்திகள்
  மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான  உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார். நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும். சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி...
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் அப்போலோ மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையம்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் அப்போலோ மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையம்

helth tips, HOME SLIDER, NEWS, உடல் நலம், செய்திகள்
  அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்க...
25 ரூபாய் ஊறுகாய் மேட்டரில் 35 ஆயிரத்தை அபராதம் கட்டிய ஓட்டல் முதலாளி!

25 ரூபாய் ஊறுகாய் மேட்டரில் 35 ஆயிரத்தை அபராதம் கட்டிய ஓட்டல் முதலாளி!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
25 ரூபாய் ஊறுகாய் மேட்டரில் 35 ஆயிரத்தை அபராதம் கட்டிய ஓட்டல் முதலாளி!   விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவர். இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்காக, 2022ம் ஆண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பணம் செலுத்தி, 25 பார்சல் சாப்பாடு வாங்கினார். அதற்கான ரசீதை தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார். வீட்டிற்கு சென்ற ஆரோக்கியசாமி, உணவு பொட்டலங்களை முதியோருக்கு வழங்கியபோது, அதில் ஊறுகாய் இல்லை. ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, ஊறுகாய் வைக்காதது உறுதியானது. இதையடுத்து, ஊறுகாய்க்கான 25 ரூபாயை திரும்பக் கேட்டுள்ளார் ஆரோக்கியசாமி. ஆனால், ஹோட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஆரோக்கியசாமி, விழுப்புரம...
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, kodanki darbar, kodanki headlines news, kodanki voice, NEWS, உடல் நலம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா  சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக்குனர் திரு வெற்றி மாறன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கம் ஏற்பாடு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி சிறப்பித்தார். மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கியதுடன் ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களையும் பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மேலும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ' உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம் ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம். நண்பர்களுடன் இணைந்து 2000 வரை...
ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

helth tips, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய ...
தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்ந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் உத்தரவை மாநில அரசுகள் நீக்க வேண்டும். பொதுமக்கள் நலனுக்காக சில கொள்கைகளை உருவாக்கி மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். மத்...
கோடை வெப்பம் அதிகரிப்பு, பகலில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – கால்நடைத்துறையினர் அறிவுறுத்தல்!

கோடை வெப்பம் அதிகரிப்பு, பகலில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – கால்நடைத்துறையினர் அறிவுறுத்தல்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் பலர், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்த்தல் தொழிலில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தீவனப்பற்றாக்குறை, நோய்வாய்ப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் அவ்வப்போது பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். அதேநேரம் இனிவரும் நாட்களில் கோடையில் அதிவெப்பம் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவும் உள்ளனர். அதன்படி, கறவை மாடுகளில் பால் உற்பத்தி பாதிக்காமல் இருக்க சில வழிமுறைகளைக் கையாள விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது: கோடையில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும். இவை, கறவை மாடுகளை அடிக்கடி வட்டமிடுவதாலும், மேலே அமர்ந்து தொந்தரவு செய்வதாலும் கறவை மாடுகள் அமைதியற்ற நிலையில் இருக்கும். இதனால் பால் உற்பத்தி குறையும். ஈக்களை கட்டுப்படுத்தி தகுந்த மருந்தை தெளிக்க வேண்டும். மாட்டுத்தொழுவம் மற்று அதனைச் ...
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 375 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.132-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.134 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்....
சுகர் பிரச்னைக்கு சுலபத் தீர்வு தக்காளி!

சுகர் பிரச்னைக்கு சுலபத் தீர்வு தக்காளி!

helth tips, HOME SLIDER, கட்டுரை
    உலக சுகாதார மையத்தின் மதிப்பீடுகளின்படி, 2014 இல் 422 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த மதிப்பீடு கடந்த 1980 இல் 108 மில்லியனாக இருந்தது. கடந்த இரண்டு முதல் மூன்று தசாப்தங்களில் நீரிழிவு நோயின் உலகளாவிய பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால வரும் 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் உலகின் ஏழாவது பெரிய கொடியாக நோயாக மாறும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு என்பது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது அல்லது குறைவது ஆகும். விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தாமதமான நோயறிதல்கள் காரணமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மக்களுக்கு கடினமாக்குகிறது, மேலும் நீரிழிவு சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். &nb...