புதன்கிழமை, ஜனவரி 19
Shadow

விளையாட்டு செய்திகள்

ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து!

ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து! அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால், ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் இருந்தன. இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அரை சதமடித்து 53 ரன்னில் வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிரின் 4 விக்கெட்டும், கிரேக் யங் 3 விக்க...
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு  அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த தொடரில் பங்கேற்றுள்ள நிலையில்,  கொரோனா பாதிப்பால் ஆண்கள் இரட்டை ஆட்டங்களில் இருந்து இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் மனு அத்ரி ஆகியோரும் விலகி உள்ளனர். இந்தியாவின் சாய் பிரனீத்தும் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார். பி.வி.சிந்து மற்றும் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி பட்டம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்து கடைசியாக 2018-லும், ஸ்ரீகாந்த் 2017-லும் பட்டத்தை வென்றுள்ளனர். ...
இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு – சென்னையில் 20 ஓவர் போட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு – சென்னையில் 20 ஓவர் போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு - சென்னையில் 20 ஓவர் போட்டி! இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் (2022) விளையாடும் போட்டி விவரங்களை பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வெளியிட்டுள்ளது. இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. 2-வது டெஸ்ட் நாளை முதல் 7-ந் தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடக்கிறது. அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் 19, 21 (பாரல்) மற்றும் 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 12-ந் தேதிகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆ...
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை!

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை! கால்பந்து என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடற்தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவாவில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இந்தியாவை கிரிக்கெட் ஆக்கிரமித்த போதிலும், இங்கு கால்பந்து விளையாட்டுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. இந்த நிலையில் கோவா மாநிலம் பனாஜியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரமாண்ட சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா மாநில மந்திரி மைக்கேல் லோபோ கூறுகையில் ‘‘இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை கோவா மாநிலம், இந்தியாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் இந்த நிலை நிறுவப்பட்டுள்ளது. நம்முடைய குழந்த...
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு! இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 1998-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015-ம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக...
மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி – அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி!

மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி – அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகைகள், விளையாட்டு செய்திகள்
மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி - அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி! இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து இருவரும் தங்களது மகளின் முகத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமலேயே ரகசியம் காத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் விராட் கோலி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்திற்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்தபோது தனது மகள் வாமிகா, மனைவி அனுஷ்கா சர்மா இருவரையும் அழைத்து சென்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், கோலியின் மகளின் முகத்தை புகைப்படம் பிடித்துவிட்டார். ஆனாலும் அந்த புகைப்படம் எந்த பத்திரிக்கையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த பத்திரிக்கையாளருக்கு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- என் மகளின் புகைப்படம், வீடியோ எதையும் வெளியிடாத அந்த பத்திரிக்கை...
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு! தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அரசு அறிவித்தது. சிலம்பம் விளையாட்டை 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....
ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்!

ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்!

HOME SLIDER, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது. இவை இரண்டும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரண்டு கைக்கடிகாரங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு கைக்கடிகாரங்களும் துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில், அவற்றிற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால், ஹர்திக் பாண்டியா மீது சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது....
நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், விளையாட்டு செய்திகள்
நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை! நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார். சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்தி சாஹர் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சாஹரின் தங்...
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்! டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது. கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந...