சிம்புவால் வீடு,வாசல் இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்… 20 கோடி கடனை எப்படி அடைப்பேன் தயாரிப்பாளர் கதறல்
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, குளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களை கவராமல் பெரும் தோல்விய சந்தித்து. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார்.இந்நிலையில், இதுகுறித்து நேற்று (நவம்பர் 30) நிருபர்களிடம் பேசிய அவர், “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்துக்கு சிம்புவை ஒப்பந்தம் செய்தபோது 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். ஆனால் 27 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார். ஒவ்வொரு நாளும் 5 நிமிடம், 10 நிமிடம் மட்டுமே நடித்தார். இதனால் நிறைய காட்சிகளில் அவருக்குப் பதிலாக டூப் நடிகரைப் பயன்படுத்திப் படமாக்கினோம். பாதிப் படம் முடிந்த நிலையில் ...









