எமகாதகி சினிமா விமர்சனம் 3.5/5
பெரும்பாலும் கிராமத்து கதைகள் குடும்ப உறவுகளை மட்டுமே பேசும். ஆனால் “ரூபாவின் ரகசியம்” இந்த பாரம்பரியத்தைக் கடந்து ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லரை உருவாக்குகிறது. இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் ஒரு சாதாரண குடும்பக் கதையை ஒரு திகில் நிறைந்த அனுபவமாக மாற்றியிருக்கிறார்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஊர் தலைவர் செல்வராஜ் (ராஜு ராஜப்பன்) அவரது மனைவி சந்திரா (கீதா கைலாசம்) மகன் முத்து (சுபாஷ் ராமசாமி) மகள் லீலா (ரூபா கொடுவாயூர்) மருமகள் ஹரிதா (பிரேமா) கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். லீலா சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு, அவ்வப்போது இன்ஹேலர் பயன்படுத்துவார். மறுபுறம், ஊர் கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் போது, முத்து அவனது இரண்டு நண்பர்கள் உதவியுடன் முன்பு கோவிலில் உள்ள கீரிடத்தை திருடி அதை அடமானம் வைத்து வி...









