‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ அரசியல் திரில்லர் திரைப்படம்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது
தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார்
பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிம...









