தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5
தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5
கமலின் தக் லைப் நாயகனின் வழி வந்த கதையா? அல்லது மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்தவானம் கதையைப்போல ஒரு கதையா? வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டு கதையை தேடுகின்ற மேக்கிங் ஆப் மணி சாரின் ஒரு படைப்பா? இப்படி ஏராளமான கேள்விகளோடு இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் தக் லைப் யாருக்கெல்லாம் லைப் கொடுக்கப்போகிறது…
கதைப்படி…. எதுக்கு கதையெல்லாம் விடுங்க கழுத கதையா முக்கியம்… படம் எப்படி இருக்கு அதை சொல்லுங்கன்னு நீங்க யோசிக்கிறது தெரியுது…
வழக்கமான மணிரத்னம் படம்தான்னு நம்பிக்கை முதல்லயே வந்துடுது… எப்படின்னா நாசர் மகள் கல்யாணத்துக்கு முன்னாடியே காதலனை நம்பி கர்ப்பம் ஆகிடுறா… அங்க ஆரம்பிக்கிது படம்…
அப்பறம் அவ செத்து… அதுக்கு காரணமானவன கொன்னு கமல் ஜெயிலுக்கு போய் திரும்பி வர்றதுக்குள்ள வளர்த்தவங்ளே கமலுக்கு எதிரா...









