ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

HOME SLIDER

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம்..!

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் (blue supermoon lunar eclipse) வருகிற 31-ம் தேதி தோன்றவுள்ளது. இது 2018-ம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும். இந்த நிகழ்வின் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைகொண்டிருக்கும். இதனால் மற்ற நேரங்களைவிட இந்த தருணத்தில் மிகவும் பெரிதாக காணப்படும். இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் எனவும், 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாலை நேரத்தில் முழு நிறைவாக இந்த கிரகணம் தெரியும் எ...
கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை..!

கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை..! பீகாரில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் கடந்த 3-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அன்று வழங்கப்படவில்லை. மறுநாளைக்கு (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதிக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமா...
ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..! நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த ஆண்டின் கடைசி நாள் மறக்க முடியாத நாளாக மாறிப்போனது. ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் முன்பு அறிவித்தார். ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் கொடி என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். அந்த இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இதுவரையில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளி...
ஆன்மீக அரசியல் என்பதே ஒரு பித்தலாட்டம் என கூறி ரஜினியை சாடியிருக்கிறார் வீரமணி..!

ஆன்மீக அரசியல் என்பதே ஒரு பித்தலாட்டம் என கூறி ரஜினியை சாடியிருக்கிறார் வீரமணி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி திராவிடர் கழகம், ஆந்திர நாத்திக மையம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு திருச்சி சுந்தர்நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். பொது செயலாளர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குனர் டாக்டர் லட்சுமண் தமிழ் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து நாத்திகம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. மாநாட்டில் கி.வீரமணி பேசியதாவது:- மனித குலத்தின் உரிமைகளை சட்டப்படி மீட்டு எடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம் தான். இந்த மாநாடு கடவுள் மறுப்பு மட்டும் அல்ல, சமூகத்தில் நிலவி வரும் தீண்டாமை, சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் நடத்தப்படுகிறது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. இந்தியாவில் நிலவிய சாதி, தீண...
தினகரன் வருகை… ஸ்லீப்பர் செல் அச்சம்…  அதிமுக. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

தினகரன் வருகை… ஸ்லீப்பர் செல் அச்சம்… அதிமுக. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரன் வருகை.. ஸ்லீப்பர் செல் அச்சம்... அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு தலைமைக் கொறடா பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானதாக உள்ளது. அதை மீறி நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராகவும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் சட்டசபையில் செயல்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை பாய்ந்தது. இந்த நிலையில், டி.டி.வி.தினகரனே எம்.எல்.ஏ.யாகி சட்டசபைக்குள் வருகிறார். அவருக்கு ஏற்கனவே அ.தி.மு.க. கட்சியிலும், ஆட்சியாளர்களிலும் சிலீப்பர் செல் என்ற வெளிக்குத் தெரியாத ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சட்டசபையில் எழும் பிரச்சினைகளில் அப்படிப்பட்டவர்கள், டி.டி.வ...
கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்..!

கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் வீட்டில் போலீஸ் நடிகர் கமல்ஹாசன் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகிறார். தான் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற செயலியையும் வெளியிட்டுள்ளார். வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதற்காக இந்து அமைப்புகள் கமல்ஹாசனை தாக்கிப் பேசி வந்தனர். தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்த கமல்ஹாசன் நேற்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து, சுயமாக வளர்ந்த சுயேச்சை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். டோக்கனுக்கு விலை போய்விட்டார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள். இது ஜனநாயகத்துக்கு வீழ்ச்சி என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தினகரனும் எதிர்வினையாற்றியிருந்தார். வாக்காளர்களை பிச்சைக்காரர்கள...
பலூன் படத்தால்ரூ.1.5கோடி நஷ்ட புகார்… ஜெய்யை சிக்க வைத்தாரா அஞ்சலி..!?

பலூன் படத்தால்ரூ.1.5கோடி நஷ்ட புகார்… ஜெய்யை சிக்க வைத்தாரா அஞ்சலி..!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ஜெய் மீது புகார் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு ‘பலூன்’ திரைப்பட தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண் பாலாஜி ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:- எங்களுடைய ‘பலூன்’ திரைப்படம் திட்டமிட்டதற்கு மாறாக, 9 மாதங்கள் தாமதமாக வெளியானது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய். இந்த படத்தின் நாயகனாக நடித்த அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் படவெளியீடு தள்ளிப்போனது. டப்பிங்கிற்கு கூட சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது, நாங்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற அளவுக்கு நடந்து கொண்டார். இங்கு 20 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தோம். ஆனால் ஜெய் வரவில்லை. இதனால் ரூ.30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அஞ்சலிக்...
புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது. பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம் ரூ. 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 10 ரூபாய் சாக்லெட் பிரௌன் வண்ணத்தில் உள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும். தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது....
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு இரட்டை ஜோடி..!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு இரட்டை ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
செல்வராகவன் இயகத்தில் சூர்யாவுக்கு இரட்டை ஜோடி..! சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை புத்தாண்டை முன்னிட்டு சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இந்த படத்தில் சாய் பல்லவி தான் நாயகி என்று முடிவு செய்திருக்கும் நிலையில், ரகுல் ப்ரீத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக நீராஜா கோனா ஒப்பந்தம் செய்யப்பட...
சென்சார் அதிகாரிகள் பாராட்டிய  தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் – சூர்யா

சென்சார் அதிகாரிகள் பாராட்டிய தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் – சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் - சூர்யா ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் ,, ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் ச...