“சிட்டி ஆப் ட்ரீம்ஸ்” பேசும் அமெரிக்க அவலம்!
அமெரிக்க நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் * சிட்டி ஆப் ட்ரீம்ஸ்*
இதன் தயாரிப்பாளர் RufusParker பேசுகையில்,
இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்பொழுது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசை பகுதி பிச்சைக்காரர்கள், என்று பிரபல இயக்குனர்களும் சரி டாக்குமெண்ட்ரி எடுப்பவர்களும் சரி உலக நாடுகளுக்கு அதை தான் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.
அதே சமயம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை பார்க்கும்பொழுது ஏதோ சொர்க பூமி போல் காட்டி உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை *சிட்டி ஆப் ட்ரீம்ஸ் என்ற ஆங்கிலப்படம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. வெவ்வேரு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கொத்தடிமைகளாக அடக்...








