“லில்லிபுட்” பெயரில் அரசியல் சர்ச்சை படம் தயாரிக்கும் சுயேட்சை சேர்மன்!
சேலம் வேங்கை அய்யனார்
நடிகர், தயாரிப்பாளர் இவர் விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தில் தேனீ விவசாய வேட்பாளராக நடித்தவர். மாஸ்டர் மகேந்திரன் மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் 'கரா' படத்தில் தாதா வேடத்தில் நடித்துள்ளார். அம்மா ராஜசேகர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்'தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் 'வெட்டு' என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் காட்டுவாசி சமூகத்தின் தலைவராக நடித்துள்ளார். விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் 'நொடிக்கு நொடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
சேலம் வேங்கை அய்யனார் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. தனது ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் தயாரிப்பில் 'என்டர் தி டிராகன்' என்ற படத்தை தமிழில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு ஆகியோர...









