மோகன்லாலின் பிறந்தநாளில் அவர் நடிப்பில் தயாராகும் ‘விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
*மோகன்லாலின் பிறந்தநாளில் அவர் நடிப்பில் தயாராகும் 'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்*
*'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால், ''இது சிறப்பு வாய்ந்தது. இதை எனது எல்லா ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்'' என குறிப்பிட்டிருக்கிறார்*
*விருஷபா 2025 - அக்டோபர் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது*
'இந்திய சினிமாவின் லாலேட்டன் ' மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரம்மாண்ட படைப்பான 'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
டிராகன் அளவிலான வடிவங்களுடன் சிக்கலானதாகவும், விரிவானதாகவும் தங்க பழுப்பு நிற கவசத்தை அணிந்த மோகன்லால், ஒரு புராண போர் வீரன் - ராஜாவாக கம்பீரமாக நிற்கிறார். அவரது அலைபாய...









