ராகு கேது விமர்சனம்
ராகு கேது விமர்சனம்
தமிழில் பல ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆகியுள்ள புராண பக்தி படம் ராகு கேது.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த மோதலில் அசுரர்கள் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் துன்புறுத்தினார்கள். தேவர்கள் தங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றி அழியாத தன்மையைப் பெறுவதற்காக நாரதரின் யோசனைப்படி மகாவிஷ்ணுவை சந்தித்து தங்களை அசுரர்களிடமிருந்து காத்து அருளுமாறு வேண்டிக் கொண்டார்கள். அப்போது அவர், திருப்பாற்கடலில் மலையை மத்தாகவும், பாம்பைக் கயிறாகவும் வைத்து கடைந்தால் அதிலிருந்து அமுதம் உண்டாகும் என்றும், அதை அருந்துபவர்களுக்கு மரணம் கிடையாது என்று அசுரர்களிடம் தெரிவியுங்கள். இதைக் கேட்கும் அவர்கள் உடனே இதற்குச் சம்மதிப்பார்கள். அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையும் பணியைத் துவக்குங்கள் என்றார் மகாவிஷ்ணு. இந்திரன் அசுரர்களை அழைத்து பாற்கடலைக் கடையும் விஷ...









