விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன் குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ ஆகிய இரண்டு படங்களை அறிவித்தார் கனடா தமிழர்!
*விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் 'பிரெய்ன்', நவீன் குமார் இயக்கும் 'ஷாம் தூம்' ஆகிய இரண்டு படங்களை அறிவித்தார் ஆர் ஜே சாய்*
கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 12) இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் ஜே சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார்.
ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகவுள்ள இப்படங்களுக்கு 'பிரெய்ன்' மற்றும் 'ஷாம் தூம்' எனப் பெயரிடப்பட்டுள்ளன. 'பிரெய்ன்' திரைப்படத்தை 'தாதா 87', 'பவுடர் ', மற்றும் 'ஹரா' புகழ் விஜய்ஶ்ரீ ஜி இயக்க, 'ஷாம் தூம்' படத்தை நவீன் குமார் இயக்குகிறார். 'ஷாம் தூம்' படத...









