தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சினிமா பிஆர்ஓ தொழில் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகும் இனிய வரலாற்று நிகழ்வு, யூனியன் பதிவு செய்து 25 ஆண்டுகள் ஆகும் வெள்ளி விழா என முப்பெரும் விழாவை கொண்டாட உள்ளனர்.
விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நுங்கம்பாக்கம் லே மேஜிக் லேன்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள், திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை “மக்கள் தொடர்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் டாக்டர் கலைஞர் முதல்வரான பின் எங்கள் பிதாமகன் பிலிம்நியூஸ்ஆனந்தன் அவர்களுக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.
அதன்பிறகு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர...









