“ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. வசனத்தால் பா.ஜ.க., சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி..!
திரைக்கு வரும் பல படங்கள் சர்ச்சை காட்சிகள் மற்றும் வசனங்களால் அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது வழக்கமாகி விட்டது.
விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்று இருந்த ஜி.எஸ்.டி வசனத்துக்கு பா.ஜனதா கட்சியினரும் மருத்துவ துறை குளறுபடிகள் சம்பந்தமான வசனத்துக்கு டாக்டர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியில் தயாரான பத்மாவதி படத்தில் வரலாற்றை திரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியதால் வடமாநிலங்களில் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?’ என்ற வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.சமீபத்தில் இணையதளங்களில் வெளியான படத்தின் டிரெய்லரில் இந்த சர்ச்சை வசனம் வருகிறது.
“ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. ராவணன், சீதையை...









