நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் “ASK” மொபைல் செயலி வெளியிட்டு சரத்குமார் நம்பிக்கை
திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது ‘ஆஸ்க்’ (ASK) எனப் பெயரிடப்பட்ட மொபைல் செயலியை வெளியிட்டார். அன்றாட சமூகப் பிரச்னைகளைப் பேசி, பகிர்ந்து, மேலும் குறை தீர்த்துக்கொள்ள சரத்குமாருக்கும் மக்களுக்கும் ஓர் இடை-ஊடகமாக இந்த மொபைல் செயலி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உபயோகிக்கக்கூடிய வசதியுடையதாய் அமைக்கபட்டிருக்கிறது.
பிரதமரின் நிதி ஆலோசகராக இருந்து ஓய்வுபெற்ற நாராயணன், டாக்டர் அசோக் பாலசுப்பிரமணியன், ராதிகா சரத்குமார், டாக்டர் வசுதா பிரகாஷ் ஆகியோரது முன்னிலையில் சரத்குமார் இந்தச் செயலியை வெளியிட்டார்.
இந்தச் செயலியை வெளியிட்டு தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது, "மக்களுக்குப் பணி செய்ய இன்று வேகமாய் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினே...









