என் முதல் பட சம்பளம் 14 ஆயிரம் அடுத்த படத்தில் ஒரு கோடி வாங்கினேன் – இயக்குனர் செல்வமணி பேச்சு
இயக்குநர் ஆர். கே. செல்வமணி
இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்தி இயக்கி இயக்குனர் ஆக மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குத் தீமையே தெரியாது, நன்மை தான் செய்வார். மிகச் சிறந்த இயக்குநர்களை, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பல முறை சொல்லியுள்ளார். இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி. அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.
"YOLO" என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை ...









