வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

HOME SLIDER

சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், 'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார். இதனால் 'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக...
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்! நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படாமல் இருந்தது. கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கர்ப்பிணி...
சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர்  கே. வி.பாலா அவர்கள் சந்தித்து, கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர்  கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.   மேலும் அவர்கள் அளித்த அறிக்கையில் கூறியதாவது :  மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கட்கு, கடந்த சட்ட மன்ற தேர்தலிலே, ஆகப்பெரும் வெற்றியை அடைந்து, நம் தாய்த் தமிழகத்தின் முதல்வராக  தாங்கள் அரியணை ஏறியமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்த்தி வணங்குகிறோம். தங்கள் சீர்மிகு தலைமையிலே தமிழகம் தொழில் துறையிலும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிலும் தன்னிகரிலா வளர்ச்சி கண்டு, தரணியிலே தலைநிமிரும் என...
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?

ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி? தமிழகச் சின்னத்திரை வட்டாரத்தில் சகலருக்கும் தெரிந்த சேனல் ராஜ் டிவி நெட்வொர்க் . இது மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர். காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். இதன் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்தரனால் ரூ 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட பிரபல சின்னத்திரை நிறுவனத்தின் புகார் காவல் துறைக்கும் மற்றும் பல அரசு துறைகளுக்கும்  போக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சின்னத்திரை வட்டார ஹாட் நியூஸ்.   அதாவது பிஏ என்ற பாரதி அசோசியேட் நிறுவனத்தின் சேர்ம...
சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்! நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். இந்நிலையில், இந்த டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது....
மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி!

மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி! ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக அதர்வாவின் தள்ளிப்போகாதே, நகுலின் எரியும் கண்ணாடி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில், அவர் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யோகிபாபுவும், சிவாவும் ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு 2, சுமோ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித்துடன் நடித்தத்தை 27 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த பிரபல நடிகை! கடந்த 1994ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் ’பாசமலர்கள்’. இந்த படத்தில் அஜித் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிகை காயத்ரி அதன் பின் ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் பெற்றார். இந்த நிலையில் நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’பாசமலர்கள்’ படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 27 வருடங்கள் கழித்து அஜித்துடன் நடித்ததை நடிகை காயத்ரி நினைவுகூர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ...
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று கட்டுப்படுவதை பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய் தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 2-வது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்பட 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 3-வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இதில் 3-வது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன...
‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’!

‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை முறியடித்த ‘வலிமை’! அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை அடுத்த மாதம் படமாக்க உள்ளனர். வலிமை படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகாத நிலையிலும், இப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம். அப்படி ‘வலிமை’ படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ‘பாகுபலி 2’ சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்...
மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி!

மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி! தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண்டவர் பூமி, அவள் வருவாளா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரதராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 16-ம் தேதி கவிதாவின் மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது கணவரும் தற்போது உயிரிழந்துள்ளார். ஒரே மாதத்தில் மகனையும், கணவரையும் பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்....