செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்… ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்… மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை

 

துப்பாக்கி சூடு உடற்கூறு ஆய்வு முடிவுகளில் பகீர் தகவல்… ஆதாரம் வெளியிட்ட முகிலன் மாயமான விவகாரம்… மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சர்ச்சை

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பாவி மக்கள் பலர் சுடப்பட்டனர். இந்தக் கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல் கூறாய்வு அறிக்கையை 9 மாதங்களாக வெளியிடாமல் இழுத்தடித்து, இப்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை ஜான்சி, கந்தையா, தமிழரசன், செல்வசேகர், கிளாஸ்டன் மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய ஆறு பேரின் உடல் கூறாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜான்சி மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் தலையில் சுடப்பட்டு மூளை சிதறி இறந்துள்ளனர். பெரும்பாலும் மார்பு பகுதி தலைப்பகுதியில்தான் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருக்கின்றன. செல்வசேகர் பலத்த காயங்களுடன் சந்தேகமான முறையில் இறந்துள்ளார். இப்படி பல திடுக்கிடும் தகவல்களை கூறுகிறது உடல் கூறாய்வு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலனை காணவில்லை. மக்களவை தேர்தல் வரும் வேளையில், மீண்டும் தூத்துக்குடி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பது, தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

462 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன