சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

சட்டசபையில் மீண்டும் பரபரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

 

அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.

ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சரிவு எனவும் எதிர்க்கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதால் ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கினார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

666 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன