வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

5ம், 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு ஆணை

 

 

5ம், 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு ஆணை

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்ப பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்தன.

இந்நிலையில், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

‘மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின்  கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பழைய நடைமுறைப்படியே தேர்வு நடத்தப்படும்’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன