புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

கொரானா ஒழியணும் இல்ல தடுப்பூசி வரணும் அதுவரை பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு!

ஒன்று கொரானா ஒழிய வேண்டும் அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் அதுவரை பள்ளிகளை திறக்கக்கூடாது என்று லட்சக்கணக்கான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்

 

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது என்பது அரசின் மிகமோசமான முடிவாகும். நெருப்பை அணைக்க வேண்டி இருக்கும்போது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானது. நடப்பு முதலாவது பருவம், ஆன்லைன் வழியிலேயே நீடிக்க வேண்டும். கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரையோ பள்ளிகளை திறக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏற்கனவே, எல்.கே.ஜி.,முதல் 7ம் வகுப்பு வரை தவிர்த்து விட்டு 8முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷிப்டு முறையில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தலாமா என்ற ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெற்றோர்களின் இந்த எதிர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

718 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன