ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15
Shadow

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் 20-ந் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும்.
21, 22-ந் தேதிகளில் ஒருசில வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை 9 செ.மீ., நன்னிலம் 8 செ.மீ., திருவிடை மருதூர், சிதம்பரம் தலா 7 செ.மீ., மயிலாடுதுறை 6 செ.மீ., கள்ளக்குறிச்சி 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
544 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன