ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 14
Shadow

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்..!

 

 

மிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் முடுக்கிவிட்டுள்ளன.

இதுதொடர்பான அனைத்துக் கட்சி கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது.

ஜனவரி 24 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருப்பதால், அ

தற்கு முன்கூட்டியே ஜனவரி 22 ஆம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மாநில தேரதல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில், இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டனர். அதில் 120 பேர் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் நடிகர் விஜயை சந்தித்து நேரிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் இதனை உற்று நோக்கிய நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட தயராகி வருகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் என்பதால், கிராம பகுதியைக் காட்டிலும் நகரப்பகுதிகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அதிகமானோர் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

692 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன