வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

கொரோனா வைரஸ்  அடிக்கடி உருமாற்றம் பெற்று புதிய வகையாக மாறி பரவி வருகிறது. இதுவரை காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று பல்வேறு வடிவங்களை கொரோனா வைரஸ் எடுத்து விட்டது.

ஒமைக்ரான் வைரசில் இருந்து 4 வகையான துணை உருமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் பிஏ1, பிஏ.2 ஆகிய 2 வகை வைரசுகள் தற்போது உலகம் முழுக்க பரவி உள்ளன.

இந்த நிலையில் பிஏ.1, பிஏ.2 ஆகிய 2 வைரசுகளும் கலந்து எக்ஸ்-இ என்ற புதிய வகை கொரோனா வைரசை தோற்றுவித்துள்ளன. இந்த எக்ஸ்-இ வைரஸ் முந்தைய கொரோனா வைரசுகளை விட 10 மடங்கு அதிவேகமாக பரவும் ஆற்றல் கொண்டது.

இது ஒருவரை தாக்கினால் உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதியாகவில்லை.

என்றாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று பெரும்பலான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுக்க சுமார் 600 பேருக்கு எக்ஸ்-இ கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மும்பையில் ஒரு பெண்ணுக்கு இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.

ஆனால் அதை மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இந்த நிலையில் குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்-இ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக ஆங்கில நாளிதழில் தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பாளர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எக்ஸ்-இ வைரஸ் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் பற்றிய வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

எக்ஸ்-இ வைரஸ் சாதாரண மற்ற வைரஸ்களை போலத்தான் இருக்கும். எந்த வித அச்சுறுத்தலும் அது தரவில்லை. எனவே பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடித்தால் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

326 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன