வியாழக்கிழமை, ஜூன் 1
Shadow

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட போவதாகவும் தகவல் பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் காங்கிரஸ், தி.மு.க. இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை ரத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றபோது அவரை வாழ்த்தி கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

73 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன