ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 15
Shadow

சர்வதேச கடல்வழி கடத்தல் மாஃபியாவின் அச(த்த)ல் முகம் அகிலன் – கோடங்கி 3.5/5

 

சர்வதேச கடல்வழி கடத்தல் மாஃபியாவின் அச(த்த)ல் முகம் அகிலன் – கோடங்கி 3.5/5

 

 

ஜெயம் ரவியை வைத்து பூகோளம் படத்தை இயக்கியவர், என். கல்யாண கிருஷ்ணன். அதே இயக்குநருடன் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் கை கோர்த்துள்ளார், ஜெயம் ரவி.

இப்படத்தில் கரடுமுரடான துறைமுக தொழிலாளியாக வந்து, கடல் வழியில் நடக்கும் மாஃபியா கும்பல் பற்றி சற்று விரிவாகவே விளக்க முயற்சித்திருக்கிறார்… அகிலன் அசத்தல் கதையா? சொதப்பல் கதையா வாங்க பார்ப்போம்.

 

இந்தியாவின் கடல் வழி கள்ளக்கடத்தலுக்கு தலைவனாக விளங்கு கபூர். அவன் சொல்படி தனது ஆட்களை வைத்து கடல் வழியாக கடத்தும் பெரிய தாதா ஹரிஷ் பேரடி. இவரிடம் திறமையான கடத்தல்காரன் எனப் பெயரெடுப்பவர்தான் நம்ம ஹீரோ அகிலன்(ஜெயம் ரவி).

இவருக்கு உதவும் காவல் அதிகாரியாகவும் காதலியாகவும் வருகிறார், பிரியா பவானி சங்கர்.

ஆனால் அகிலனை பிடித்து ஜெயிலில் தள்ளியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் டெல்லி இன்டலிஜன்ஸ் படையை சேர்ந்த போலீஸாக வருகிறார் கோகுல்(சிரக் ஜானி).

 

இவர்கள் அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு முடிக்கவேண்டிய வேலைகளை கனகச்சிதமாக முடிக்கிறார், ஜெயம்ரவி.

 

இவரது வேலைகளால் இம்ப்ரஸ் ஆகும் கள்ளக்கடத்தல் தலைவன் கபூர், ஒரு வெளிநாட்டு தீவிரவாதியை கடல் வழியே வெளிநாட்டிற்கு தப்பிக்க வைக்க வேண்டும் என சேலஞ்ஜ் வைக்கிறார்.

அதை ஜெயம் ரவி செய்து முடித்தாரா? ஜெயம் ரவி உண்மையாகவே கள்ளக்கடத்தலில்தான் ஈடுபடுகிறாரா? அல்லது இவர் ஒரு உளவுத்துறை ஏஜெண்ட்டா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக்கதை.

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, கடல் வழி கடத்தல்களில் ஈடுபடும் கடல் நாயகனாக படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை ஈர்க்கிறார் ஜெயம்ரவி. இவர் நடித்த படங்களில் அகிலன் தனியாக தெரிவான்.

 

கடல் வழி கதையை விட அதன் திரைக்கதையும் காட்சிப்படுத்தப்பட்டவிதமும் இயக்குனருக்கு சபாஷ் போட வைக்கிறது.

 

கதைக்கு ஏற்றவாறு, சாம் சி.எஸ்சின் இசையும் ஈடு கொடுத்து பயணித்துள்ளது. படத்தில், ஒரு இடத்தில் கூட காமெடி இல்லை, ஆனாலும் அது பெரிய குறையாக தெரியவில்லை

 

தரையில் எடுக்கப்பட்டதை விட தண்ணீரில்தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது. கடலின் அழகை மட்டுமே ரசிக்கும் மக்களிடம் அதன் இருட்டான மறு பக்கத்தையும் சொல்ல முயற்சித்திருக்கின்றனர்.

சமுத்திரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சிகளும், துரைமுகத்தில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்டெய்னர்களில் உள்ள மர்மங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

படத்தில் பல முக்கிய கதாப்பாத்திரங்கள் வந்தாலும், படம் என்னவோ ஜெயம் ரவியை சுற்று மட்டுமே சுழல்வது சிறிது தொய்வளிக்கிறது. சின்ன ரோலில் வந்தாலும், படம் முடிந்து எழுந்து செல்கையில் மனதில் நிற்கிறார், தான்யா ரவிச்சந்திரன்.

ஹீரோவிற்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை நாயகனுக்கு வில்லனாக வரும் காவல் அதிகாரி சிரக் ஜனிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

நேர்மையான போலீஸாக இவர் வரும் காட்சிகள் அனைத்திலும் தியேட்டர் அதிர்கிறது.

பிரியா பவானி சங்கருக்கு ரெமான்ஸ் காட்சியும் இல்லை, படத்தில் பெரிதாக வேலையும் இல்லை. பெயருக்கு படத்தின் நாயகியாக வந்து போகிறார்.

வழக்கமான கோலிவுட் படங்களை போலவே இதிலும், 4ற்கும் மேற்பட்ட சண்டை காட்சிகளும், ஆங்காங்கே பாடல்களும், அவ்வப்போது பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இருப்பினும் மற்ற படங்களிடமிருந்து அகிலன் வேறுபடுவது, அதன் திரைக்கதையினால் மட்டுமே.

 

  • கோடங்கி 3.5/5

 

216 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன