செவ்வாய்க்கிழமை, ஜூன் 25
Shadow

எனது நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!

தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘ரங்கூன்’ போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

இவருடைய ‘ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்’ சார்பில் தற்போது கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘1947- ஆகஸ்ட் 16’ படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அவருடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு கார்த்திக் சார் ரொம்ப பிடிக்கும்.

கார்த்திக் சார் ரொம்ப ஸ்வீட். கவுதம் கார்த்திக் மீட் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு, கார்த்திக் சாரை பார்த்தேன். ரொம்ப அழகான நடிகர். அதை தாண்டி சார் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம், எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது.

எல்லாரிடமும் யாருடைய சாயலாவது பார்க்க முடியும். என்னை எடுத்துக் கொண்டால் நான் பாதி ரஜினி சாருடைய நடிப்பை தான் வெளிப்படுத்துவேன் என்றார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். சிவகார்த்திகேயன், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

157 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன