வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 23
Shadow

கட்டில் – திரைப்பட விமர்சனம் 2.5/5

 

கட்டில் படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார் என்பது ஒருவரிக்கதை.

பூர்வீகவீட்டை விற்க நினைக்கிறார்கள் வெளிநாட்டில் தங்கிவிட்ட கதாநாயகனின் சகோதரனும் சகோதரியும். கதாநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் வேறுவழியின்றி சம்மதிக்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க நாயகனுக்கு மனமில்லை.அதைக் காப்பாற்றுவதிலும் பெரிய கனமான கட்டில் என்பதால் அதை இடம்மாற்றுவதிலும் சிக்கல்கள். இவற்றின் விளைவுகள்தாம் படம்.

நாயகன் கணேஷ்பாபு ரசித்து நடித்திருக்கிறார். அவர் சிரிக்கும் காட்சிகளைவிட சோகக்காட்சிகள் அதிகம்.

சிருஷ்டிடாங்கேவுக்கும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து நன்றாக நடித்து தனக்கும் படத்துக்கும் பலமாக இருக்கிறார்.

மூத்தோர்களின் பிரதிநிதியாக இருக்கிறார் கீதாகைலாசம். அவருடைய பாத்திரப்படைப்பு சிந்திக்க வைக்கும்.

கட்டில்மேல் கால்மேல்கால்போட்டு சிறுவன் நித்தீஷ் உறங்கும் காட்சி. ஓட்டுமொத்தப்படத்தின்  நோக்கத்தை பிரதிபலிக்கிறது

செம்மலர் அன்னம் கவனம் ஈர்க்கிறார்.

வைட் ஆங்கிள் இரவிஷங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு, கதையின் கனத்தையும் வெளிப்படுத்துகின்றன.

ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

மொத்தத்தில் கட்டில் கனம் போல கதையும் திரைக்கதையும் கனமாக இருந்தும் ஏதோ ஒரு குறை படம் முழுக்க தெரியாமல் பயணிக்கிறது.

கட்டில் கவனம் ஈர்க்கும் ரசிகர்கள் பார்த்தால்!

மதிப்பீடு 2.5/5

86 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன