சனிக்கிழமை, பிப்ரவரி 8
Shadow

தோற்ற காதல் ஜெயித்த அன்பு கலவையான ”மெரி கிறிஸ்துமஸ்” – கோடங்கி விமர்சனம் 3.5/5

 

நடி ராத்திரியில் திரிஷா கைய புடிச்சிகிட்டு ரோட்டில் நடந்து போனா அது விஜய்சேதுபதிக்கு கிடைக்காத காதல் 96 படம்… அதுவே குழந்தைய தூக்கிக்கிட்டு நடு ராத்திரியில் கத்ரீனா கைஃப் கூட நடந்து போனா அது விஜய்சேதுபதியோட கொலையான காதல் மெரி கிறிஸ்துமஸ்..

அப்பாவியா தெரியும் விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் கத்ரினா கைஃப்பை மட்டும் ஈர்க்கவில்லை, படம் பாக்குற எல்லாறையும் இழுக்குது. அவருடைய காதல்கதையைச் சொல்வதும் அதில் இருக்கும் படிப்படியான முன்னேற்றம் சுவாரசியம்.

கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதி எடுக்கும் முடிவு ஷாக் ரகம்தான் ஆனா அப்ளாஸ் என்னமோ விஜய்சேதுபதிக்குத்தான்.

ஒரு குழந்தைக்கு அம்மாவா வந்தாலும் கத்ரினா கைஃப் நடிப்பில் அசத்துகிறார். சோகம்…  ஆட்டம்… அழகு என எதிலும் குறைவில்லை. படம் தொடங்கிய சில நொடிகளில் விஜய்சேதுபதியிடம் தன் கணவர் குறித்து  கத்ரீனா கைஃப் பேசும் அந்த ஒரு டயலாக்… தியேட்டரை அதிர வைக்கிறது.

அழகான கத்ரீனா கைஃப் போடும் திட்டமும், திகில் முயற்சியும் அழகின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்தையும் காட்டுகிறது.

கொஞ்ச நேரமே வந்தாலும் ராதிகா ஆப்தே கதையின் டிவிஸ்ட்.  விஜய்சேதுபதியின் காதல் அதில் உள்ள கவர்ச்சி அதன் பின்னால் இருக்கும் கடும் அதிர்ச்சி ஆகிய இரண்டையுமே காட்சிப்படுத்தி ரசிகனுக்கு ஷாக் கொடுக்கிறார் இயக்குனர்..

ராதிகா, சண்முகராஜன் ஆகியோர் அங்கங்கே வந்து சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறார்கள்.

மதுநீலகண்டனின் ஒளிப்பதிவு மெல்லிய காதலாய் காட்சிகளை நகர்த்துகிறது. ப்ரீத்தம் இசையில் பாடல்கள் கேட்கலாம். டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை ரசனை.

பிரதீப் குமார்.எஸ்.அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

தீரா காதலையும், நிறைவேறா காமத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து உணர்வுகள் ஒவ்வொரு மனிதனையும் எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை மிக அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள்..

அதை அப்படியே கொஞ்சமும் மாற்றாமல் அதே நேரம், திரைக்கதை நுட்பங்களை வசனங்களில் மட்டும் சொல்லவேண்டும் என்று எண்ணாமல் அர்த்தம் மிகுந்த குறியீடுகள் மூலம் சொல்லி தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.

மொத்தத்தில் மெரி கிறிஸ்துமஸ் தோற்ற காதல் ஜெயித்த அன்பு!

– கோடங்கி

மதிப்பீடு 3.5/5

 

171 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன