தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த்!
2024ம் ஆண்டில் பத்ம விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, சமூகப் பணி தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதன்படி, மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உட்பட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருதுக்கு தேர்வானவர்கள்.
விஜயகாந்த் – கலை(தமிழகம்)
ஃபாத்திமா ஃபீவி – பொது விவகாரங்கள்(கேரளா)
ஹோர்முஸ்ஜி – இலக்கியம் மற்றும் கல்வி(மகாராஷ்டிரா)
மிதுன் சக்ரவர்த்தி – கலை(மேற்கு வங்கம்)
சீதாராம் ஜிண்டல் – வர்த்தகம் மற்றும் தொழில் துறை(கர்நாடகா)
யங் லியு – வர்த்தகம் மற்றும் தொழில் துறை(தைவான்)
அஷ்வின் பாலசந்த் மேத்தா – மருத்துவம்(மகாராஷ்டிரா)
சத்யபிரதா முகர்ஜி – பொது விவகாரங்கள்(மேற்கு வங்கம்)
ராம் நாயக் – பொது விவகாரங்கள்(மகாராஷ்டிரா)
தேஜஸ் மதுசூதன் படேல் – மருத்துவம்(குஜராத்)
ராஜகோபால் – பொது விவகாரங்கள்(கேரளா)
தத்தாத்ரே அம்பாதாஸ் – கலை(மகாராஷ்டிரா)
டோக்டன் ரின்போச்சே – ஆன்மிகம்(லடாக்)
பியாரேலால் சர்மா – கலை(மகாராஷ்டிரா)
சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் – மருத்துவம்(பீகார்)
உஷா உதுப் – கலை(மேற்கு வங்கம்)
குந்தன் வியாஸ் – இலக்கியம் மற்றும் கல்வி(மகாராஷ்டிரா)