புதன்கிழமை, டிசம்பர் 11
Shadow

தூக்குதுரை விமர்சனம் 2.5/5

 

 

அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் தூக்குதுரை படம்.

கதைப்படி சில காட்சிகளிலேயே கொல்லப்பட்டுவிடுகிறார் யோகிபாபு.அதன்பின் அவரைப் பயன்படுத்த இயக்குநர் கடைபிடித்திருக்கும் உத்தி படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

அரசகுடும்பத்து வாரிசு என்பதற்கேற்ற அழகுடன் இருக்கிறார் இனியா. திரைக்கதையில் அவருக்கு குறைவான இடம்தான். ஆனால் வரும் காட்சிகளில் வரவேற்புப் பெறுகிறார்.

நான்கடவுள் இராசேந்திரன் தலைமையிலான மகேஷ், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர்தான் படத்தைத் தொடங்கி வழிநடத்தி முடித்து வைக்கவும் செய்கிறார்கள்.

மறைந்த நடிகர் மாரிமுத்து,நமோ நாராயணன் ஆகியோர் வேடங்களும் அவர்களுக்குள் நடக்கும் போட்டியும் படத்தை நகர்த்த உதவுகிறது.

காதல்கதையாகத் தொடங்கி பேய்க்கதையாக மாறும் டெனிஸ் மஞ்சுநாத் திரைக்கதைக்கு இசையால் பலம் சேர்க்க முயன்றிருக்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ் .

எழுதி இயக்கியிருக்கும் டெனிஸ் மஞ்சுநாத் முயற்சி பெருசா கைகொடுக்கவில்லை.

 

134 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன